‘இந்தியன்-2’ முக்கிய தகவல்!

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால் நடிக்கும் ‘இந்தியன்-2’ 18-ஆம் தேதி துவங்குகிறது!

செய்திகள் 12-Jan-2019 11:17 AM IST Top 10 கருத்துக்கள்

‘2.0’ படம் வெளியானதும் ஷங்கர் ‘இந்தியன்-2’ பட வேலைகளை துவங்க இருக்கிறார் என்ற தகவலை வெளியிட்டிருந்தோம். ‘இந்தியன்-2’ படத்தில் கமல்ஹாசனுடன் கதாநாயகியாக நடிக்க காஜல் அகர்வால் ஒப்பந்தமாகியுள்ளார் என்ற ன்ற தகவலையும் வெளியிட்டிருந்தோம். சமீபத்தில் கலை இயக்குனர் முத்துராஜ் தலைமையில் ‘இந்தியன்-2’ படப்பிடிப்பு வேலைகளுக்கான செட் வேலைகளும் சென்னையில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இப்போது இந்த செட் வேலைtகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது என்றும் இந்த செட்டில் வருகிற 18-ஆம் தேதி முதல் ‘இந்தியன்-2’வின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது என்றும் தகவல் கிடைத்துள்ளது. அனிருத் இசை அமைக்கும் ‘இந்தியன்-2’ படத்தின் ஒளிப்பதிவை ரவிவர்மன் கவனிக்க உள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. ஷங்கர் இயக்கத்தில் உருவான ‘2.0’ படத்தைப் போல இந்த படத்தையும் ‘லைகா புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. இந்நிலையில் ‘இந்தியன்’ முதல் பாகத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த மலையாள நடிகர் நெடுமுடி வேணு இரண்டாம் பாகத்திலும் நடிக்க இருக்கிறார் என்ற தகவலை சமீபத்தில் இயக்குனர் ஷங்கர் அளித்த ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

#Indian2 #KamalHassan #Sankar #KajalAggarwal #LycaProductions

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

காப்பான் - டீஸர்


;