விஜய் படத்தில் நடிப்பது குறித்து சாயிஷா ட்வீட்!

ஏ.எல்.விஜய் இயக்க, ஜி.வி.பிரகாஷ் நடிக்கும்  ‘வாட்ச்மேன்’ படத்தில்  கதாநாயகியாக சாயிஷா நடிக்கிறார்!

செய்திகள் 12-Jan-2019 11:52 AM IST Top 10 கருத்துக்கள்

ஏ.எல்.விஜய் இயக்கிய 12 படங்களில் 7 படங்களுக்கு இசை அமைத்தவர் ஜி.வி.பிரகாஷ்குமார்! இந்நிலையில் ஜி.வி.பிரகாஷ்குமாரை வைத்து ஏ.எல்.விஜய் ஒரு படத்தை இயக்க இருக்கி வருகிறார் என்றும் இந்த படத்திற்கு ‘வாட்ச்மேன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது என்றும் தகவலை சமீபத்தில் வெளியிட்டிருந்தோம்! சத்தமில்லாமல் படப்பிடிப்பு நடந்த இப்படத்தில் ஜி.வி.பிரகாஷுடன் சாயிஷா கதாநாயகியாக நடித்து வர, இப்போது இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இயக்குனர் ஏ.எல்.விஜய்யின் ஆஸ்தான ஒளிப்பதிவாளரான நீரவ்ஷா மற்றும் சரவணன் ராமசாமி ஆகியோர் ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்திற்கு வழக்கம்போல ஜி.வி.பிரகாஷே இசை அமைக்கிறார்.

சமீபத்தில் இப்படத்திற்காக ஜி.வி.பிரகாஷும், சாயிஷாவும் இணைந்த ஒரு பாடல் காட்சியை படமாக்கியிருக்கிறார்கள். இந்த பாடல் காட்சியின் அனைத்து படப்பிடிப்பும் முடிவடைந்த நிலையில் நடிகை சாயிஷா அது குறித்த தகவலை தன்னுடன் இயக்குனர் ஏ.எல்.விஜய், ஜி.விபிரகாஷ், ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா ஆகியோர் இருக்கும் ஒரு புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு தெரியப்படுத்தியுள்ளார். ஏ.எல்.விஜய் இயக்கிய ‘வனமகன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சாயிஷா அவரது இயக்கத்தில் நடிக்கும் இரண்டாவது படம் ‘வாட்ச்மேன்’ என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் தவிர சாயிஷா, சூர்யாவின் ‘காப்பான்’ படத்திலும் நடித்து வருகிறார்.

#Sayyeshaa #GvPrakash #Watchman

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

Watchmen ட்ரைலர்


;