300 நடன கலைஞர்களுடன் யாஷிகா ஆனந்த் குத்தாட்டம்!

கிருஷ்ணா, பிந்துமாதவி நடிக்கும் ‘கழுகு-2’ படத்திற்காக யாஷிகா ஆனந்த் ஆட்டம்!

செய்திகள் 12-Jan-2019 1:04 PM IST Top 10 கருத்துக்கள்

இரண்டாம் பாக படங்கள் வரிசையில் உருவாகி வரும் இன்னொரு படம் ‘கழுகு-2’. முதல்பாக ‘கழுகு’ படத்தை இயக்கிய சத்யசிவாவே இரண்டாம் பாகத்தையும் இயக்கி வர, முதல் பாகத்தில் நடித்த கிருஷ்ணா, பிந்துமாதவி இருவரும் இரண்டாம் பாகத்திலும் இணைந்து நடிக்கின்றனர். இந்த படத்திற்காக யாஷிகா ஆனந்த் ஒரு நடனம் ஆடியுள்ளார். ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற படம் மூலமும், ‘பிக்பாஸ்-2’ நிகழ்ச்சி மூலமும் மிகவும் பிரபலமான யாஷிகா ஆனந்த், நடனம் ஆடியுள்ள இந்த பாடல் படத்தின் ஹைலைட்களில் ஒன்றாக இருக்கும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ‘சகலகலா வள்ளி…’ என்று துவங்கும் இந்த பாடல் காட்சியில் 300-க்கும் மேற்பட்ட நடன கலைஞர்களுடன் யாஷிகா ஆனந்த் நடனம் ஆடியுள்ளார் என்றும் இந்த பாடலுக்கு தீனா மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார் என்பதையும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

#Yashikaanand #Kazhugu2 #Krishna #BindhuMadhavi

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கீ - ட்ரைலர்


;