9 கல்லூரி மாணவிகளை தன் இசையில் பாட வைக்கிறார் இளையராஜா!

9 கல்லூரி மாணவிகளுக்கு பாட வாய்ப்பு வழங்க இருக்கிறார் இளையராஜா!

செய்திகள் 12-Jan-2019 3:33 PM IST Top 10 கருத்துக்கள்

சமீபத்தில் இளையராஜா, சென்னையிலுள்ள எத்திராஜ் கல்லூரி, ராணிமேரி கல்லூரி ஆகிய இரண்டு மகளிர் கல்லூரி விழாக்களில் கலந்து கொண்டார். அங்கே அவரது பிறந்த நாள் விழாவையும் கல்லூரி மாணவிகள் முன்னிலையில் கேக் வெட்டி கொண்டாடினார். இந்நிகழ்ச்சியில் இளையராஜா பேசியும், பாடியும் கலகலப்பூட்டினார். அப்போது கல்லூரி மாணவிகளுடன் இளையராஜா கலந்துரையாடியதோடு கல்லூரி மாணவிகள் கேட்ட கேள்விகளுக்கும் பதில்கள் அளித்துள்ளார். அந்த நிகழ்ச்சியில் கல்லூரி மாணவிகள் சிலர் இளையராஜா முன்னிலையில் பாடல்களை பாடியதுடன், அவரது இசையில் பாட விரும்புவதாகவும், அது எங்களது கனவு என்றும் தெரிவித்தனர். இது இளையராஜாவின் எண்ணத்தில் அவ்வப்போது அலையடித்து கொண்டிருந்தது. இந்த நிலையில் பாட விருப்பம் தெரிவித்த சில மாணவிகளை அழைத்து இளையராஜா குரல் சோதனை நடத்தியுள்ளார். அதனை தொடர்ந்து அவர்களில் இருந்து நன்றாக பாடக் குடிய 9 மாணவிகளை இளையராஜா தேர்வு செய்துள்ளார். இந்த 9 மாணவிகளுக்கும் இளையராஜா அடுத்தடுத்து இசை அமைக்கும் படங்களில் பாட வாய்ப்பு வழங்க முடிவு செய்துள்ளார். இளையராஜா மூலம் தேர்வாகியுள்ள அந்த 9 மாணவிகளும் இப்போது பூரிப்பில் உள்ளனர்.

#Ilayaraja #Ilaiyaraaja

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நாச்சியார் - டிரைலர்


;