‘விஜய்-63’யில் இணைந்த மேலும் ஒரு பிரபலம்!

அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘விஜய்-63’ படத்தில் கதிர் நடிக்கிறார்!

செய்திகள் 12-Jan-2019 6:10 PM IST Top 10 கருத்துக்கள்

அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் விஜய்யின் 63-ஆவது படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது. இந்த படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக் ஆகியோர் நடிக்க இருக்கிறார்கள் என்றும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார் என்றும் அதிகாரபூர்வ தகவலை வெளியிட்டிருந்தோம். இந்நிலியில் இந்த படத்தில் சமீபத்தில் வெளியாகி பேசப்பட்ட ‘பரியேறும் பெருமாள்’ படத்தில் கதாநாயகனாக நடித்த கதிர் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருக்கிறார் என்ற தகவலை படக்குழுவினர் சற்றுமுன் வெளியிட்டுள்ளனர். ‘கிருமி’, ‘விக்ரம் வேதா’, ‘சிகை’ முதலான படங்களில் மாறுபட்ட கேரக்டர்களை ஏற்று நடித்த கதிர் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் படம் ‘சத்ரு’ என்பது குறிப்பிடத்தக்கது.

#Vijay-63 #Vijay #ThalaPathy63 #Kathir #Atlee

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கொலைகாரன் - ட்ரைலர்


;