‘இந்தியன்-2’ குறித்து ஏ.ஆர்.ரஹ்மான்!

‘இந்தியன்-2’ படத்திற்கு வாழ்த்து தெரிவித்த ஏ.ஆர்.ரஹ்மான்!

செய்திகள் 19-Jan-2019 12:36 PM IST Top 10 கருத்துக்கள்

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா ஆகியோர் நடித்து 1996-ல் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘இந்தியன்’. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்தார். இந்த படத்தின் மிகப் பெரிய வெற்றிக்கு ஏ.ஆர்.ரஹ்மானின் இசையும் ஒரு முக்கிய காரணமாக அமைந்திருந்தது. ‘இந்தியன்’ படத்தின் இரண்டாம் பாகம் இப்போது ‘இந்தியன்-2’ என்ற பெயரில் உருவாகி வருகிறது. ‘இந்தியன்-2’ படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னையில் துவங்கியது. ஷங்கர் இயக்கத்தில் இதுவரை வெளியான படங்களில் ‘அந்நியன்’ படம் தவிர அனைத்து படங்களுக்கும் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்தான். அதைப் போல ‘இந்தியன்-2’ படத்திற்கும் ஏ.ஆர்.ரஹ்மானே இசை அமைப்பார் என்ற எதிர்பார்ப்பில் இருந்தனர் ரசிகரக்ள். இந்நிலையில் ‘இந்தியன்-2’ படத்திற்கு அனிருத் இசை அமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்த விஷயம் ஏர்.ஆர்.ரஹ்மான் ரசிகர்களை கொஞ்சம் ஏமாற்ற மடைய செய்தது. இந்நிலையில் ‘இந்தியன்-2’ படத்தின் படப்பிடிப்பு நேற்று துவங்க இருப்பதாக இயக்குனர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். ஷங்கரின் இந்த பதிவுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்த்து தெரிவித்து ‘படம் மாபெரும் வெற்றிபெற வாழ்த்துக்கள்’ என்று பதிவிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் பெரும் வெற்றிக் கூட்டணியாக திகழ்ந்த ஷங்கரும், ஏ.ஆர்.ரஹ்மானும் மீண்டும் அடுத்த படத்தில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கலாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தாராள பிரபு டீஸர்


;