‘இளையராஜா-75’ - உறுதி அளித்த ரஜினி, கமல்!

‘இளையராஜா-75’ நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் கலந்துகொள்ள இருக்கிறார்கள்!

செய்திகள் 19-Jan-2019 12:47 PM IST Top 10 கருத்துக்கள்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் ‘இளையராஜா-75’ என்ற நிகழ்ச்சி ஃபிப்ரவரி 2,3 தேதிகளில் சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பிரம்மாண்டமான முறையில் நடைபெற இருக்கிறது. இளையராஜாவை கௌரவிக்கும் விதமாகவும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு நிதி திரட்டும் வகையிலும் நடத்தப்பட இருக்கும் இந்த நிகழ்ச்சியில் தென்னிந்திய சினிமா கலைஞர்கள் மட்டும் இல்லாமல் வட இந்திய சினிமா கலைஞர்களும் கலந்துகொள்ள இருக்கிறார்கள் என்று இவ்விழா குழுவினர் தெரிவித்துள்ளனர். அதற்காக விழா குழுவினர் திரையுலகத்தை சேர்ந்த முக்கிய பிரபலங்களை நேரில் சென்று அழைப்பு விடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில் சமீபத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால், செயலாளர்கள் கதிரேசன், எஸ்.எஸ்.துரைராஜ், பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு மற்றும் விழா குழுவை சேர்ந்த நடிகர்கள் நந்தா, மனோபாலா ஆகியோர் ரஜினி, கமல்ஹாசன் ஆகியோரை சந்தித்து விழாவுக்கு வரும்படி அழைப்பு விடுத்தனர். இந்த அழைப்பை ஏற்று ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் விழாவுக்கு வருவதாக உறுதி அளித்துள்ளனர். இந்த தகவலை இவ்விழா குழுவினர் சார்பில் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஆக்‌ஷன் ட்ரைலர்


;