‘திருமணம்’ ஆடியோ விழாவில் சிறந்த 6 இயக்குனர்களை கௌரவித்த சேரன்!

‘திருமணம்’ இசை வெளியீட்டு விழாவில் சிறந்த படைப்புகளை தந்த 6 இயக்குனர்களை கௌரவித்த சேரன்1

செய்திகள் 21-Jan-2019 2:01 PM IST Top 10 கருத்துக்கள்

சேரன் இயக்கத்தில் உருவகியுள்ள படம் ‘திருமணம்’. உமாபதி ராமையா, அறிமுகம் காவ்யா சுரேஷ், சேரன், சுகன்யா, தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், ஜெயபிரகாஷ், மனோபாலா, பாலசரவணன், சீமா ஜி. நாயர், அனுபமா குமார், வெங்கட், தாரா ஆகியோர் நடித்திருக்கும் இந்த படத்திற்கு சித்தார்த் விபின் இசை அமைத்துள்ளார். சேரன் இயக்கத்தில் 11-ஆவது படமாக உருவாகியுள்ள இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சற்றுமுன் சென்னையிலுள்ள கமலா திரையரங்கில் நடைபெற்றது. இதற்காக கமலா திரையரங்கம் திருமண விழாகோலம் பூண்டிருந்தது.

இவ்விழாவில் இயக்குனர்கள் மகேந்திரன், பாரதிராஜா, கே.எஸ்.ரவிக்குமார் கவிஞர் வைரமுத்து உட்பட் பல பிரபலங்கள் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார்கள். இவ்விழாவை வழக்கமான பாடல்கள் வெளியீட்டு விழா என்று இல்லாமல் மாறுபட்ட வகையில் நடத்தினார் சேரன். அதாவது சமீபத்தில் சமூக விஷயங்களை வலியுறுத்தி எடுக்கப்பட்டு ரசிகர்கள், விமர்சகர்கள் மற்றும் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பு பெற்ற திரைப்படங்களின் இயக்குனர்களை கௌரவித்தார். அவர்கள் ‘அறம்’ படத்தை இயக்கிய கோபி நயினார், ‘மேற்கு தொடர்ச்சி மலை’ படத்தை இயக்கிய லெனின் பாரதி, ‘கனா’ படத்தை இயக்கிய அருண்ராஜா காமராஜ், ‘பரியேறும் பெருமாள்’ படத்தை இயக்கிய மாரி செல்வராஜ், ‘அடங்க மறு’ படத்தை இயக்கிய கார்த்திக் தங்கவேல், தேசிய விருது பெற்ற படமான ‘டு-லெட்’ படத்தை இயக்கிய செழியன் ஆகியோரவார்கள். தமிழ் சினிமாவின் முன்னோடி இயக்குனர்களான மகேந்திரன், பாரதிராஜா, கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் கவிஞர் வைரமுத்து ஆகியோர் முன்னிலையில் இந்த இளம் தலைமுறை இயக்குனர்களை கௌரவித்தது ‘திருமணம்’ ஆடியோ விழாவில் நடைபெற்ற ஹைலைட் விஷயமாகும்.

இதனை தொடர்ந்து ‘திருமணம்’ படத்தின் பாடல்களை இயக்குனர்கள் மகேந்திரன், பாரதிராஜா, கே.எஸ்.ரவிக்க்குமார் மற்றும் கவிஞர் வைரமுத்து ஆகியோர் இணைந்து வெளியிட, அதனை இயக்குனர்கள் கோபி நயினார், செழியன், லெனின் பாரதி, அருண்ராஜா காமராஜ், கார்த்திக் தங்கவேல், மாரி செல்வராஜ ஆகியோர் பெற்று கொண்டனர்.

‘PRENISS’ நிறுவனம் சார்பில் பிரேம்நாத் சிதம்பரம் தயாரித்துள்ள இந்த படம் அடுத்த மாதம் வெளியாக இருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கௌதமிபுத்ர சாதகர்ணி - டிரைலர்


;