‘‘ஜிப்ஸி என்னை லக்கி ஹீரோவாக்கும்!’’ - ஜீவா நம்பிக்கை

‘ஜிப்ஸி’ சிங்கிள் டிராக் வெளியீட்டு விழாவில் நடிகர் ஜீவா படம் குறித்து நம்பிக்கை பேச்சு

செய்திகள் 23-Jan-2019 11:53 AM IST Top 10 கருத்துக்கள்

‘ஒலிம்பியா மூவில் சார்பில்’ எஸ்.அம்பேத்குமார் தயாரித்திருக்கும் ‘ஜிப்ஸி’ படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியிட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் படத்தின் தயாரிப்பாளர் எஸ்அம்பேத்குமார், ஒளிப்பதிவாளர் எஸ்.கே.செல்வகுமார், படத்தொகுப்பாளர் ரேமண்ட் டெரிக் க்ராஸ்டா, பாடலாசிரியர் யுகபாரதி, இயக்குநர் ராஜுமுருகன், படத்தின் நாயகன் நடிகர் ஜீவா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த படத்தில் ஜீவா, நடாசா சிங், ஸன்னி வைய்ன், லால் ஜோஸ், பாடகி சுசீலா ராமன், விக்ராம் சிங், கருணா பிரசாத் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தில் ‘சே’ என்ற பெயரில் குதிரை ஒன்றும் நடித்திருக்கிறது.

இவ்விழாவில் இப்படம் குறித்து இயக்குனர் ராஜு முருகன் பேசுகையில், ‘‘இந்த படம் அரசியல் படமல்ல. ஒரு அமைப்பு சார்ந்து எடுக்கப்பட்ட படமல்ல. ஒரு நியாயமான படம். இந்த படம் லவ் வித் மியூசிக்கலி படம்.இந்த படத்தில்ஒன்பது பாடல்கள் இருக்கிறது. அதில் சிறிது அரசியல் கலந்திருக்கிறது. அதிலும் எளிய மக்களின் நியாயமான அரசியல் பேசப்பட்டிருக்கிறது.’’

‘ஜிப்ஸி’யில் நடித்த அனுபவம் குறித்து நடிகர் ஜீவா பேசுகையில். “ஒரு நாட்டுப்புற பாடகர், இந்தியா முழுவதும் சுற்றித்திரிகிறார். அவருக்கு கிடைத்த அனுபவங்களுக்கு பிறகு அவர் புரட்சிகரமான பாடகராக மாறுகிறார். அவர் ஏன் அப்படி மாறுகிறார் என்றால் அதன் பின்னணியில் ஒரு காதல் இருக்கிறது.” என்று இந்த படத்தின் கதையை ஒன்லைனாக இயக்குநர் ராஜு முருகன் என்னிடம் சொல்லும் போதே எனக்கு பிடித்திருந்தது. அதிலும் என்னுடைய கேரக்டரைசேஷன் ஆச்சரியப்படுத்தியது.கதையில் ஒரு உண்மை இருந்தது. நாகூர்,வாரணாசி, ஜோத்பூர், காஷ்மீர் என இந்திய முழுவதிற்கும் பயணித்து படமாக்கினோம். இந்த படம் வெளியான பிறகு ஜீவா ஒரு லக்கியான நடிகர் என்று அனைவரும் பாராட்டுவார்கள். இதற்காக இயக்குநருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்!’’ என்றார்.


#PradeepKumar #SanthoshNarayanan #Gypsy #Jiiva #RajuMurugan #NatashaSingh #SunnyWayne
# LalJose #SusheelaRaman #VikranthSingh #Karuna

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஜிப்ஸி ட்ரைலர்


;