‘தெகிடி’ கூட்டணியில் உருவாகும் ரொமான்ஸ் மிஸ்ட்ரி திரைப்படம்!

அறிமுக இயக்குனர் சந்தீப் ஷ்யாம் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் இணையும் அசோக் செல்வன், ஜனனி ஐயர்

செய்திகள் 23-Jan-2019 12:00 PM IST Top 10 கருத்துக்கள்

திரைப்படங்களில் நடித்துக் கிடைத்த புகழைவிட 100 நாட்கள் நடைபெற்ற ‘பிக்பாஸ்’ மூலம் பட்டிதொட்டியெங்கும் பரவலாக அறியப்பட்டவர் ஜனனி ஐயர். தமிழில் கடைசியாக இவர் நடித்து வெளிவந்த படங்கள் பலூன் மற்றும் விதி மதி உல்டா. இப்படங்களுக்குப்பிறகு வேறெந்த படங்களிலும் ஒப்பந்தமாகாமல் இருந்த ஜனனி, தற்போது அறிமுக இயக்குனர் சந்தீப் ஷ்யாம் இயக்கத்தில் புதிய படமொன்றில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இப்படத்தில் ‘தெகிடி’யில் ஜனனியுடன் இணைந்து நடித்த அசோக் செல்வன் ஹீரோவாக நடிக்கிறார்.

ஐடி துறையிலிருந்து சினிமாவிற்கு வந்திருக்கும் இயக்குனர் சந்தீப் ஷ்யாம், இப்படத்தை ரொமான்ஸ் மிஸ்ட்ரி படமாக உருவாக்கி வருகிறாராம். இப்படத்தின் முதல் ஷெட்யூல் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், வரும் பிப்ரவரியில் அடுத்த ஷெட்யூல் படப்பிடிப்பு துவங்க உள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஜாக்பாட் ட்ரைலர்


;