விருதுகளை அள்ளிய ‘டூ-லெட்’ பட ரிலீஸ் தேதி!

செழியன் இயக்கத்தில் உருவாகி பல்வேறு விருதுகளை வாங்கி குவித்த படமான ‘டூலெட்’ ஃபிப்ரவரி 21ஆம் தேதி வெளியாகிறது!

செய்திகள் 28-Jan-2019 1:40 PM IST Top 10 கருத்துக்கள்

பாலா இயக்கிய, ‘பரதேசி’, ‘தாரை தப்பட்டை’, ராஜு முருகன் இயக்கிய ‘ஜோக்கர்’ உட்பட பல படங்களின் ஒளிப்பதிவாளர் செழியன். இவர் இயக்குனர் அவதாரம் எடுத்து இயக்கியுள்ள படம் ‘டூலெட்’. இந்த படத்தில் செழியனின் உதவியாளர் சந்தோஷ் நாயகனாக நடிக்க, சுசீலா, தருண், ஆதிரா பாண்டிலட்சுமி ஆகியோரும் நடித்துள்ளனர்.

சென்னை போன்ற பெருநகரங்களில் வீடு தேடி அலையும் நடுத்தர குடுபத்தை சேர்ந்தவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படமாம் இது! பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு 30-க்கும் மேற்பட்ட விருதுகளை இப்படம் வாங்கி குவித்துள்ளது. சென்ற ஆண்டின் சிறந்த தமிழ் படத்துக்கான தேசிய விருதும் இப்படத்திற்கு கிடைத்தது. மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் இப்போது அறிவித்துள்ளனர். ‘டூலெட்’ ஃபிப்ரவரி 21-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. செழியன் ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ள இந்த படத்தின் படத்தொகுப்பை ஸ்ரீகர் பிரசாத் கவனித்துள்ளார்.

#TOLET #Bala #Paradesi #TharaiThappattai #Joker #RajuMurugan #Chezhiyan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;