‘நீயா-2’ டிரைலர், பாடல்கள் எப்போது வெளியாகிறது?

‘நீயா-2’ படத்தின் டிரைலர் ஃபிப்ரவரி 1-ஆம் தேதியும் பாடல்கள் ஃபிப்ரவரி 6-ஆம் தேதியும் வெளியாகிறது!

செய்திகள் 30-Jan-2019 3:56 PM IST Top 10 கருத்துக்கள்

‘எத்தன்’ படத்தை இயக்கிய சுரேஷ் இப்போது இயக்கி வரும் படம் ‘நீயா-2’. இந்த படத்தில் ஜெய் கதையின் நாயகனாக நடிக்க, ராய் லட்சுமி, கேத்ரின் தெரெசா, வரலட்சுமி சரத்குமார் என மூன்று கதாநாயகிகள் நடிக்கிறார்கள். அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் முடிவடைந்த இந்த படத்தின் டிரைலர் ஃபிப்ரவரி 1-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதனை தொடர்ந்து இப்படத்தின் பாடல்கள் ஃபிப்ரவரி 6-ஆம் தேதி வெளியாகிறது. ஏ.ஸ்ரீதர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சபீர் இசை அமைத்துள்ளார். கமல் நடிப்பில் வெளியான ‘நீயா’ படம் போல் இந்த படமும் பழிவாங்கும் பாம்புகள் பற்றிய கதை என்று கூறப்படுகிறது. ஆனால் இது ’நீயா’ படத்தின் இரண்டாம் பாகம் இல்லையாம்!

#Neeya2 #Neeya #Jai #VaralaxmiSarathkumar #RaaiLaxmi #CatherineTresa # LSuresh

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நீயா 2 - ட்ரைலர்


;