தமிழ், தெலுங்கு படங்களுக்கு கேரளாவில் கட்டுப்பாடு!

அந்நிய மொழி படங்கள் ரிலீஸுக்கு கட்டுப்பாடு விதித்த மலையாள திரையுலகினர்!

செய்திகள் 31-Jan-2019 12:02 PM IST VRC கருத்துக்கள்

கேரளாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று அந்நிய மொழி சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் படங்கள் அதிக எண்ணிக்கையிலான தியேட்டர்களில் வெளியாவது வழக்கம்! அதிலும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜய் அஜித், சூர்யா, கார்த்தி, விக்ரம், தனுஷ் போன்ற நடிகர்கள் நடிக்கும் படங்கள் என்றால் கேரளாவில் மலையாள முன்னணி நடிகர்கள் நடித்து வெளியாகும் படங்களைப் போல 300, 400 கணக்கிலான தியேட்டர்களில் வெளியாவது வழக்கம். இதனால் அங்கு சிறிய பட்ஜெட்டில் உருவாகும் சிறிய நடிகர்கள் நடிக்கும் மலையாள படங்களை ரிலீஸ் செய்வதற்கு போதுமான தியேட்டர்கள் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு காலம் காலமாக இருந்து வருகிறது. இந்த குற்றச்சாட்டு தமிழகத்திலும் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதனால் மலையாள திரையுலகினர் ஒன்று கூடி ஒரு முடிவை எடுத்துள்ளனர். அதாவது மலையாளம் தவிர்த்த அந்நிய மொழி படங்கள் எதுவாயினும் 125 தியேட்டர்களுக்கு மேல் வெளியிட கூடாது என்று முடிவெடுத்துள்ளனர். சமீபத்தில் வெளியான ரஜினியின் ‘பேட்ட’ திரைப்பட்ம் கூட கேரளாவில் 135 தியேட்டர்களில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. மலையாள சினிமாத் துறையினரின் எடுத்துகொண்ட இந்த முடிவால், இனி வரும் காலங்களில் ரிலீஸாகும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களின் வியாபார விஷயங்களுக்கு பாதிப்பு ஏற்படும் சுழ்நிலை உருவாகியுள்ளது.
#Mollywood #MollywoodFilmIndustry #Malayalam #Rajinikanth #Petta # KamalHaasan #Vijay #Ajith
#Suriya #Karthi #Dhanush

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பேட்ட ட்ரைலர்


;