சசிக்குமார், நிக்கி கல்ராணி இணையும் படம்!

அறிமுக இயக்குனர் கதிர் இயக்கத்தில் சசிக்குமார், நிக்கி கல்ராணி நடிக்கும் படம்!

செய்திகள் 5-Feb-2019 1:40 PM IST Top 10 கருத்துக்கள்

சமீபத்தில் வெளியான ‘பேட்ட’ படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்த சசிக்குமார் நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் படங்கள் ‘நாடோடிகள்-2’ ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’, ‘கொம்பு வச்ச சிங்கமடா’ முதலானாவை! இந்த படங்களை தொடர்ந்து சசிக்குமார் அறிமுக இயக்குனர் கதிர் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். இயக்குனர் சுந்தர்.சி.யுடன் சில படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்த கதிர் இயக்கும் இந்த படத்தை ‘செந்தூர் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல்’ நிறுவனம் சார்பில் டி.ராஜா தயாரிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் சசிக்குமாருடன் நிக்கி கல்ராணி கதையின் நாயகியாக நடிக்கிறார். சசிக்குமார் நடிக்கும் 19-ஆவது படமான இப்படத்தில் மற்றும் பல பிரபலங்கள் நடிக்க இருக்கிறார்கள். விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ள இந்த படத்திற்கு சித்தார்த் ஒளிப்பதிவு செய்கிறார். சாபு ஜோசஃப் படத்தொகுப்பு செய்கிறார். கலை இயக்கத்தை சுரேஷ் கவனிக்க, சாம்.சி.எஸ்.இசை அமைக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தேவி 2 டீஸர்


;