விக்ரமின் ’மகாவீர் கர்ணா’ அப்டேட்!

விக்ரம் நடிக்கும் ‘மகாவீர் கர்ணா’ படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் துவங்கியது!

செய்திகள் 9-Feb-2019 11:37 AM IST VRC கருத்துக்கள்

விக்ரம் நடிக்கும் ‘கடாரம் கொண்டான்’ படத்தின் படப்பிடிப்பு வேலைகள் சமீபத்தில் முடிவடைந்தது! இதனை தொடர்ந்து விக்ரம் நடிக்க இருக்கும் படம் ‘மகாவீர் கர்ணா’. கிட்டத்தட்ட 300 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவாகிறது என்று கூறப்படுகிறது. பிருத்திவிராஜ், ‘பூ’ படப் புகழ் பார்வதி இணைந்து நடித்த ‘என்னு நின்டெ மொய்தீன்’ எனும் மலையாள வெற்றிப் படத்தை இயக்கிய ஆர்.எஸ்.விமல் ‘மகாவீர் கர்ணா’ படத்தை இயக்குகிறார். மகாபாரத கதையில் வரும் கர்ணன் கேரக்டரை மையப்படுத்தி எடுக்கப்படும் இந்த படத்தில் விக்ரமுடன் தென்னிந்திய சினிமாவை சேர்ந்தவர்கள். ஹாலிவுட் கலைஞர்கள் என நிறைய பேர் நடிக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று முன் தினம் ஹைத்ராபாத்திலுள்ள ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் துவங்கியது. இந்த தகவலை இந்த படத்தை இயக்கும் ஆர்.எஸ்.விமல் சமூகவலைதளம் மூலம் தெரிவித்துள்ளார். தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் நேரடியாக உருவாகும் இந்த படம் மற்ற பல்வேறு மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட இருக்கிறது என்றும் இயக்குனர் ஆர்.எஸ்.விமல் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் கூறி உள்ளார்.

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ‘துருவநட்சத்திரம்’ மற்றும் ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள கடாரம் கொண்டான் ஆகிய படங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிரபார்க்கபப்டுகிறது.

#Chiyaan #MahavirKarna #Vikram #DhuruvaNatchathiram # RSVimal

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கடாரம் கொண்டான் - ட்ரைலர்


;