தென்னிந்தியாவிலேயே முதல் இடத்தைப் பிடித்த ‘ரௌடி பேபி’

தென்னிந்திய சினிமாவிலேயே அதிக பார்வையிடல்கள் கிடைத்த வீடியோ பாடல் ரௌடி பேபி!

செய்திகள் 9-Feb-2019 1:49 PM IST VRC கருத்துக்கள்

தனுஷ், சாய் பல்லவி நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘மாரி-2’. பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகிய இப்படதிற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இந்த படத்தில் இடம் பெற்ற பாடல்களில் தனுஷ், தீ இணைந்து பாடிய ‘ரௌடி பேபி…’ என்று துவங்கும் பாடல் மிகப் பெரிய அளவில் ஹிட்டானது! ‘மாரி-2’ படம் வெளியான பிறகு ‘ரௌடி பேபி…’ பாடல் வீடியோ வடிவில் யூ-ட்யூபிலும் வெளியானது! இந்த வீடியோ யூ-ட்யூபில் வெளியானதும் ரசிகர்களிடையே வைரலாக, ஓரிரு நாட்களிலேயே இந்த வீடியோவுக்கு கோடிக்கணக்கான ரசிகர்களின் பார்வையிடல்கள் கிடைத்து முதல் இடத்தை பிடித்தது. இந்நிலையில் ‘ரௌடி பேபி…’ வீடியோ பாடல் இன்றைய நிலவரப்படி 18 கோடிக்கும் மேற்பட்டவர்களின் பார்வையிடல்கள் கிடைத்து தென்னிந்திய சினிமாவிலேயே அதிக பார்வையிடல்கள் கிடைத்த பாடல் வீடியோ என்ற சாதனையை படைத்துள்ளது. ஒரு தமிழ் திரைப்படப் பாடல் வீடியோவுக்கு இவ்வளவு பார்வையிடல்கள் கிடைப்பது இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சாதனைக்கு இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, இந்த பாடலுக்கு நடனம் அமைத்த பிரபுதேவா, மற்றும் இந்த பாடலில் சிறப்பாக நடனம் ஆடிய தனுஷ், சாய் பல்லவி முக்கியமானவர்கள் ஆவார்கள்!

#RowdyBaby #Dhanush #SaiPallavi # YuvanShankarRaja #Maari2

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

NGK - ட்ரைலர்


;