ஏ.எல்.விஜய் இயக்கிய பெரும்பாலான படங்களுக்கு இசை அமைத்தவர் ஜி.வி.பிரகாஷ்! இந்நிலையில் ஜி.வி.பிரகாஷை ஹீரோவாக்கி ஏ.எல்.விஜய் இயக்கி வந்த படம் ‘வாட்ச்மேன்’. சத்தமில்லாமல் படப்பிடிப்பு நடந்து வந்த இப்படத்தின் அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் சமீபத்தில் முடிவடைந்து படத்தின் போஸ்ட புரொடக்ஷன் வேலைகள் படு விறுவிறுப்பாக நடந்து வந்தது. அந்த வேலைகளும் முடிவடைந்த நிலையில் ‘வாட்ச்மேன்’ படம் சென்சார் குழுவினர் பார்வைக்க செல்ல, சென்சார் குழுவினர் படத்திற்குக் ‘U’ சர்டிஃபிக்கெட் வழங்கியுள்ளனர். ‘லட்சுமி’ படத்தை தொடர்ந்து ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷுடன் சாயிஷா நடிக்க, ஏ.எல்விஜய்யின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். சென்சார் வேலைகள் முடிவடைந்ததால் ‘வாட்ச்மேன்’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘சர்வம் தாளமயம்’. இந்த படத்தை தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘100% காதல்’, ‘குப்பத்துராஜா’ ஆகிய படங்களும் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.
1999-ஆம் ஆண்டு வெளியான ‘ஜோடி’ படத்தில் சிம்ரனுக்கு தோழியாக சில காட்சிகளில் நடித்திருந்தார் த்ரிஷா....
பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை படங்களைத் தொடர்ந்து ‘அசுரன்’ படம் மூலம் 4வது முறையாக கூட்டணி...
ஏ.எல்.விஜய் இயக்கிய 12 படங்களில் 7 படங்களுக்கு இசை அமைத்தவர் ஜி.வி.பிரகாஷ்குமார்! இந்நிலையில்...