‘மிஸ்டர் லோக்கலு’க்கு பரிசளித்து விடைபெற்ற நயன்தாரா!

எம்.ராஜேஷ் இயக்கும் ‘மிஸ்டர் லோக்கல்’ படத்தில்  நயன்தாரா சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!

செய்திகள் 9-Feb-2019 3:55 PM IST VRC கருத்துக்கள்

எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா இணைந்து நடிக்கும் படம் ‘மிஸ்டர் லோக்கல்’. ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் நயன்தாரா சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைய, நயன்தாரா படக்குழுவினர் அனைவருக்கும் வாட்ச் பரிசளித்துள்ளார். இதனை தொடர்ந்து படக்குழுவினரும் நயன்தாராவுக்கு பிரியா விடை அளிக்கும்விதமாக பிரம்மாண்ட கேக் ஒன்று வெட்டி அவரை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளனர். சிவகார்த்திகேயனும் நயன்தாராவும் இரண்டாவது முறையாக இணைந்து நடிக்கும் இந்த படத்திற்கு ‘ஹிப் பாப் தமிழா’ ஆதி இசை அமைக்கிறார் என்பது ஏற்கெனவே வெளியான தகவலாகும்!

#Nayanthara #SivaKarthikeyan #SK #Raadhika #MRLocal

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அயோக்யா டீஸர்


;