‘குற்றம்-23’, ‘செக்கச் சிவந்த வானம்’ ஆகிய படங்களை தொடர்ந்து அருண் விஜய் நடிக்கும் ‘தடம்’. அருண் விஜய் நடிப்பில் ‘தடையற தாக்க’ படத்தை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கியுள்ள இந்த படம் இம்மாதம் 22-ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்திருந்தது. ஆனால் படக்குழுவினர் இப்போது ‘தடம்’ மார்ச் 1-ஆம் தேதி வெளியாகும் என்ற புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இதனால் ‘தடம்’ இந்த மாதம் வெளியாகாது என்பது உறுதியாகியுள்ளது. இந்த படத்தை அருண் விஜய் நடித்த ‘குற்றம்-23’ படத்தை தயாரித்த இந்தர் குமார் தயாரித்துள்ளார். ‘தடம்’ படத்தில் அருண் விஜய்யுடன் தன்யா ஹாப், ஸ்மிருதி வெங்கட், வித்யா பிரதீப், சோனியா அகர்வால், யோகி பாபு உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். அருண்ராஜ் இசை அமைக்க, கோபிநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பை ஸ்ரீகாந்த் கவனித்துள்ளார்.
#ArunVijay #TanyaHope #VidyaPradeep #SmruthiVenkat #Thadam
‘குற்றம்-23’, ‘செக்கச் சிவந்த வானம்’ ஆகிய படங்களை தொடர்ந்து அருண் விஜய் நடிக்கும் ‘தடம்’ விரைவில்...
‘சர்கார்’ படத்தை தொடர்ந்து விஜய், அட்லி இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். ‘தெறி’, ‘மெர்சல்’ ஆகிய...
சமீபத்தில் வெளியாகி இன்னமும் ஓடிக்கொண்டிருக்கும் மணிரத்னத்தின் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில்...