‘தளபதி’ படத்திற்கு பிறகு ரஜியுடன் இணையும் பிரபலம்!

‘தளபதி’ படத்திற்கு பிறகு 27 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினி நடிக்கும் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார் சந்தோஷ் சிவன்!

செய்திகள் 11-Feb-2019 11:08 AM IST VRC கருத்துக்கள்

‘பேட்ட’ படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த படத்திற்கு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ‘துப்பாக்கி’, ’ஸ்பைடர்’ ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார் என்று கூறப்பட்டு வந்தது. இப்போது அந்த தகவல் உறுதியாகியுள்ளது போல் சந்தோஷ் சிவன், ‘தளபதி’ படத்திற்கு பிறகு மீண்டும் ரஜினி படத்தில் பணிபுரிய இருக்கிறேன்’’ என்று ட்வீட் செய்துள்ளார். இதனால் ஏ.ஆர்.முருகதாஸும், ரஜினிகாந்தும் முதல் முதலாக இணையும் படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பது செய்கிறார் என்பது உறுதியாகியுள்ளது. மணிரத்னம் இயக்கிய ‘தளபதி’, ராவணன் உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் சந்தோஷ் சிவன்! ரஜினி, மம்முட்டி இணைந்து நடித்த ‘தளபதி’ 1991-ல் வெளியானது. இந்த படம் வெளியாகி 27 ஆண்டுகளான நிலையில் மீண்டும் ரஜினி படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார் சந்தோஷ் சிவன்!

#Rajini #Vijay #Vijay63 #Atlee #ARMurugadoss #Thalapathy63

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தேவி 2 டீஸர்


;