‘வர்மா’ பட விவகாரம் - இயக்குனர் பாலா விளக்கம்!

‘வர்மா’ ரீ-ஷூட்  -  இயக்குனர் பாலா அளித்த விளக்கம்!

செய்திகள் 11-Feb-2019 12:02 PM IST VRC கருத்துக்கள்

பாலா இயக்கத்தில் விக்ரம் மகன் துருவ் நடித்த படம் ‘வர்மா’. தெலுங்கு ‘அர்ஜுன் ரெட்டி’யின் ரீ-மேக்காக உருவான இப்படம், இப்படத்தின் தயாரிப்பு தரப்பினருக்கு திருப்தி தரவில்லை என்று கூறி ‘வர்மா’வை கைவிடப்படுவதாகவும், இப்படத்தை வேறு இயக்குனர், துருவ் தவிர்த்து வேறு நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை வைத்து ரீ-ஷூட் செய்ய இருக்கிறது என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டனர். கோலிவுட்டினரை அதிர்ச்சி அடைய வைத்த இந்த அறிவிப்பை தொடர்ந்து இயக்குனர் பாலா தனது தரப்பில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், ‘‘பத்திரிகையாளர்கள், படைப்பாளிகள் கவனத்திற்கு.. வர்மா படத்தயாரிப்பாளர் தரப்பிலிருந்து தெரிவித்த தவறான தகவலால் இந்த விளக்கத்தை தர வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாக்கப்பட்டிருக்கிறேன். படைப்பு சுதந்திரம் கருதி வர்மா படத்தில் இருந்து விலகி கொள்வது என்பது நான் மட்டுமே எடுத்த முடிவு! கடந்த ஜனவரி மாதம் 22-ஆம் தேதியே தயாரிப்பாளர் உடன் இதற்கான ஒப்பந்தம் செய்துகொண்டேன். துருவ் விக்ரமின் எதிர்கால நலன் கருதி மேலும் பேச விரும்பவில்லை’’ என்று பாலா அதில் குறிப்பிட்டுள்ளார்.

#Bala #Varmaa #DhruvVikram #MeghaChowdhury #EaswariRao #RaizaWilson #AkashPremkumar

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய வீடியோக்கள்

வர்மா ட்ரைலர்


;