மீண்டும் இணையும் ‘பூமராங்’ கூட்டணி!

‘பூமராங்’ படத்தை தொடர்ந்து ஆர்.கண்ணன் இயக்கத்தில் அத்ரவா மீண்டும் நடிக்கும் படம்!

செய்திகள் 11-Feb-2019 12:10 PM IST VRC கருத்துக்கள்

‘இவன் தந்திரன்’ படத்தை தொடர்ந்து ஆர்.கண்ணன் தனது ‘மசாலா பிக்ஸ்’ நிறுவனம் சார்பில் இயக்கி தயாரித்துள்ள படம் ‘பூமராங்’. அதர்வா, மேகா ஆகாஷ் கதாநாயகன் கதாநாயகியாக நடித்துள்ள இந்த படம் மார்ச் 1-ஆம் தேதி வெளியாகும் என்ற அதிகாரபூர்வ அறிவிப்பை சமீபத்தில் ஆர்.கண்ணன் வெளியிட்டிருந்தார். இந்த படத்தை தொடர்ந்து ஆர்.கண்ணன் தனது அடுத்த பட வேலைகளை துவங்கி விட்டார். ‘பூமராங்’ படத்தை தொடர்ந்து மீண்டும் ஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா நடிக்க இருக்கிறார். இந்த படத்தையும் தனது ‘மசாலா பிக்ஸ்’ நிறுவனத்தின் மூன்றாவது தயாரிப்பாக தயாரித்து இயக்குகிறார் கண்ணன். இந்த படத்தின் தயாரிப்பில் கண்ணனுடன் M.K. ராம்பிரசாத்தின் ‘MKRP PRODUCTIONS’ நிறுவனமும் கை கோர்த்துள்ளது. இந்த படத்தின் பூஜை நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த பூஜையில் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கும் சமுத்திரக்கனி, இப்படத்தில் ஸ்டன்ட் மாஸ்டராக பணிபுரியும் ‘ ஸ்டன்ட்’ சில்வா உட்பட பலர் கலந்துகொண்டனர். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மகாமுனி -டீஸர்


;