அரவிந்த்சாமி, ரெஜினாவின் ‘கள்ள பார்ட்’ புதிய தகவல்!

அரிவிந்தசாமி, ரெஜினா கெசண்ட்ரா இனைந்து நடிக்கும் ‘கள்ள பார்ட்’ ஏபர்ல மாதம் வெளியாகிறது!

செய்திகள் 11-Feb-2019 3:05 PM IST VRC கருத்துக்கள்

அரவிந்த்சாமி, ரெஜினா கெசண்ட்ரா இணைந்து நடிக்கும் படம் ‘கள்ள பார்ட்’. ‘என்னமோ நடக்குது’, ‘அச்சமின்றி’ ஆகிய படங்களை இயக்கிய பி.ராஜபாண்டி இயக்கும் இந்த படத்தில் அரவிந்த்சாமி, ரெஜினாவுடன் ஹரிஷ் பேரடி, ஆதேஷ், பாப்ரி கோஷ், ‘ராட்சசன்’ படப் புகழ் பேபி மோனிகா உட்பட பலர் நடிக்கிறார்கள். ‘ஸ்கெட்ச்’ படத்தை தயாரித்த ‘மூவிங் பிரேம்ஸ்’ என்ற பட நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் அரவிந்த்சாமி அதிபன் என்ற ஹார்ட்வேர் ஸ்பெஷலிஸ்டாக நடிக்கிறார். ரெஜினா டான்ஸ் டீச்சராக நடிக்கிறர். ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னையில் துவங்கியது. இப்போது இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது என்றும் இந்த படத்தை ஏப்ரல் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளது என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த படத்திற்கு அரவிந்த்கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். நிவாஸ் கே.பிரசன்ன இசை அமைக்கிறார். கலை இயக்கத்தை மாயபாண்டி கவனிக்க, எஸ்.இளையராஜா படத்தொகுப்பு செய்கிரார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

7 (செவன்) - ட்ரைலர்


;