கதிரின் ‘சத்ரு’வில் இணைந்த ‘ராட்சசன்’ படத் தயாரிப்பாளர்!

கதிரின் ‘சத்ரு’ படத்தை ‘மரகதநாணயம்’, ‘ராட்சசன்’ ஆகிய படங்களின் தயாரிபாளர் டில்லி பாபு வெளியிடுகிறார்!

செய்திகள் 11-Feb-2019 5:31 PM IST VRC கருத்துக்கள்

கதிர், ஸ்ருஷ்டி டாங்கே இணைந்து நடிக்கும் படம் ‘சத்ரு’. நவீன் நஞ்சுண்டான் இயக்கியுள்ள இந்த படத்தை ‘ஆர்.டி.இன்பினிட்டி டீல் எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் சார்பில் ரகுகுமார் என்கிற திரு மற்றும் ராஜரத்தினம், ஸ்ரீதரன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். 24 மணி நேரத்தில் நடக்கும் ஆக்‌ஷன் த்ரில்லர் கதையாக உருவாகியுள்ள இந்த படம் ரிலீஸுக்கு தயாராகி வரும் நிலையில் இந்த படத்தை ‘மரகதநாணயம்’, ‘ராட்சசன்’ ஆகிய படங்களை தயாரித்த டில்லி பாபு பார்த்திருக்கிறார். ‘சத்ரு’ திரைப்படம் டில்லி பாபுவுக்கு பிடித்து போக, படத்தை நானே வெளியிடுகிறேன் என்று கூறி இப்படத்தின் விநியோக உரிமையை வாங்கியுள்ளார். இதனை தொடர்ந்து ‘சத்ரு’ படத்தை மார்ச் 1-ஆம் தேதி ரிலீஸ் செய்ய டில்லி பாபு முடிவு செய்துள்ளார். இந்த தகவல் படக்குழுவினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘சத்ரு’வில் கதிர் போலீஸ் அதிகாரியாக நடிக்க, இவருடன் ஸ்ருஷ்டி டாங்கே, பொன்வண்ணன், நீலிமா, மாரிமுத்து, ரிஷி, சுஜா வாருண்ணி, பவன், அர்ஜுன் ராம், ரகுநாத் உட்பட பலர் நடிக்கின்றனர். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு அம்ரிஷ் இசை அமைத்துள்ளார்.
#NaveenNanjundan #Sathru #Kathir # SrushtiDange #Ratsasan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சத்ரு ட்ரைலர்


;