அஜித் படத்துடன் களமிறங்கும் சிவகார்த்திகேயன் படம்!

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘மிஸ்டர் லோக்கல்’ அஜித் பிறந்த நாளான மே-1ஆம் தேதி வெளியாகிறது!

செய்திகள் 14-Feb-2019 2:13 PM IST VRC கருத்துக்கள்

‘விஸ்வாசம்’ படத்தை தொடர்ந்து அஜித் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தை இயக்கிய எச்.வினோத் இயக்கத்தில் நடிக்கிறார். ஹிந்தி ‘பிங்க்’ படத்தின் ரீ-மேக்காக உருவாகும் இந்த படத்தை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார்! இந்த படத்தில் அஜித்துடன் வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் நடிக்க, இந்த படம் அஜித்தின் பிறந்த நாளான மே-1-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா இனைந்து நடிக்கும் ‘மிஸ்டர் லோக்கல்’ திரைப்படமும் மே 1-ஆம் தேதி வெளியாகும் என்ற அதிகாரபூர்வ அறிவிப்பை அப்படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதனால் அஜித் பிறந்த நாளான மே-1ஆம் தேதி அஜித், சிவகார்த்திகேயன் நடித்த படங்கள் முதன் முதலாக ஒரே நாளில் வெளியாக இருக்கிறது. சிவகார்த்திகேயன் நடித்த ‘எதிர்நீச்சல்’ 2013 மே 1-ஆம் தேதி வெளியானது! இந்த படத்தை தொடர்ந்து மே-1ஆம் தேதி வெளியாகும் சிவகார்த்திகேயன் படம் ‘மிஸ்டர் லோக்கல்’ ஆகும்!

#MrLocal #SK #SivaKarthikeyan #Nayanthara #Raadhika #HiphopTamizha

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சைக்கோ ட்ரைலர்


;