காதலர் தினத்தை முன்னிட்டு தனது திருமணத்தை அறிவித்த ஆர்யா!

மார்ச் மாதம் நடைபெறுகிறது நடிகர் ஆர்யா, நடிகை சாயிஷா திருமணம்!

செய்திகள் 14-Feb-2019 5:02 PM IST VRC கருத்துக்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆர்யா! இவர் அவ்வப்போது தன்னுடன் இணைந்து நடிக்கும் ஹீரோயின்களுடன் கிசுகிசுக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் ஆர்யாவுடன் கஜினிகாந்த் படத்தில் இணைந்து நடித்த சாயிஷாவுடனும் ஆர்யா கிசுகிசுக்கப்பட்டார். அத்துடன் சாயிஷாவை ஆர்யா திருமணம் செய்ய இருக்கிறார் என்ற தகவலும் கோலிவுட்டில் பரவியது. இதற்கு ஆர்யாவோ, சாயிஷாவோ இதுவரை எந்தவிதமான கருத்தும் தெரிவிக்கவில்லை! இந்நிலையில் இன்று காதலர் தினத்தை முன்னிட்டு நடிகர் ஆர்யாவும், நடிகை சாயிஷாவும் தங்களது திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இந்த திருமணம் இருவரது வீட்டார் சம்மதத்துடன் நடைபெற இருக்கிறது என்றும் எங்கள் திருமணம் மார்ச் மாதம் நடக்க்கும் என்றும் தெரிவித்திருக்கிறார்கள். மும்பையை சேர்ந்த சாயிஷா தமிழ் சினிமாவில் ‘வனமகன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

#Arya #Sayyeshaa #AryaSayyeshaaMarriage

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நம்ம வீட்டு பிள்ளை - ட்ரைலர்


;