நயன்தாராவின் ‘ஐரா’ அப்டேட்!

நயன்தாரா இரண்டு வேடங்களில் நடிக்கும் ‘ஐரா’ மார்ச் மாதம் வெளியாகிறது!

செய்திகள் 14-Feb-2019 6:29 PM IST VRC கருத்துக்கள்

லட்சுமி, மா ஆகிய குறும்படங்களை இயக்கிய்வரும், ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’ படத்தை இயக்கியவருமான சர்ஜுன் கே.எம். இயக்கும் படம் ‘ஐரா’. இந்த படத்தில் நயன்தாரா இரண்டு கேரக்டர்களில் நடிக்கிறார். இந்த படத்தின் டீஸர் மற்றும் ஒரு பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இப்படத்தின் சென்சார் காட்சியும் நடைபெற்றது. ஐரா’ படத்திற்கு சென்சார் குழுவினர் U/A சர்டிஃபிக்கெட் வழங்கியிருக்கிறார்கள். ‘ஐரா’வில் நயன்தாராவுடன் கலையரன். ’யோகி’ பாபு, ஜெயப்பிரகாஷ், லீலாவதி உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள். சென்சார் முடிந்ததை தொடர்ந்து ‘ஐரா’ மார்ச் மாதம் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்திருக்கிறாகள்.

#Airaa #Nayanthara #Nayan #Kalaiarasan #YogiBabu

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;