பயங்கரவாத தாக்குதலுக்கு சூர்யா, ரஜினி, கமல் கண்டனம்!

பயங்கரவாத தாக்குதலில் உயிர் இழந்த நம் நாட்டு வீரர்கள் மற்றும் அவர்களது குடுமத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த சூர்யா!

செய்திகள் 16-Feb-2019 1:15 PM IST VRC கருத்துக்கள்

ஸ்ரீநகர் ஜம்மு நெடுஞ்சாலையில் புல்வாமாவில் சமீபத்தில் நடந்த பயங்கரவாத தாகுதலில் 40-க்கும் மேற்பட்ட நமது நாட்டு பாதுகாப்பு படை வீரர்கள் உயிர் இழந்த செய்தி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்த இரண்டு வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ள செய்தியும் வெளியாகி உள்ளது. இந்த சம்பவத்துக்கு நடிகர், நடிகைகளும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இது குறித்து நடிகர் சூர்யா கண்டனம் தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதில், ‘‘ புல்வாமாவில் துணை இராணுவ வீரர்கள் மீது பயங்கரவாதிகள் கோழைத்தனமான தாக்குதல நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலால் நான் மிகவும் மனம் உடைந்து போனேன். இந்த தாக்குதலால் மகனை, கணவரை, தந்தையை, சகோதரரை இழந்து தவிக்கும் அனைவருக்கும் எனது ஆழந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றும் இன்னொரு பதிவில் ‘‘பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பத்தினருக்கும் உதவுவது நமது கடமை’’ என்றும் சூர்யா குறிப்பிட்டுள்ளார். இந்த கொடூர தாக்குதலுக்கு நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஜெயம் ரவி, மகேஷ் பாபு, விஷால், பிரபுதேவா, பிரகாஷ் ராஜ், நடிகை ராதிகா, பாலிவுட் பிரபலங்களான சல்மான் கான், பிரியங்கா சோப்ரா, அனுஷ்கா சர்மா உட்பட பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;