‘அமைதிப்படை’யை தொடர்ந்து LKG!

‘அமைதிப்படை’ பட வரிசையில் இடம் பிடிக்கும் ஆர்.ஜே.பாலாஜியின் LKG!

செய்திகள் 18-Feb-2019 3:57 PM IST Top 10 கருத்துக்கள்

ஆர்.ஜே.பாலாஜி கதை திரைக்கதை வசனம் எழுதி கதாநாயகனாக நடிக்கும் படம் ‘LKG’. பிரபு தேவா உள்ளிட்ட பலரிடம் உதவியாளராக பணிபுரிந்த பிரபு இயக்கியுள்ள இந்த படத்தில் ஆர்.ஜே.பலாஜியுடன் ப்ரியா ஆனந்த், மயில்சாமி, நாஞ்சில் சம்பத், ராம்குமார், ஜே.கே.ரித்தீஷ் உட்பட பலர் நடித்துள்ளனர். ‘வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல்’ நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ள இந்த படம் வருகிற 22-ஆம் தேதி வெளியாகிறது. இதனை முன்னிட்டு நடந்த இப்படத்தின் பத்திரிகையாலர் சந்திப்பில் ஆர்.ஜே.பாலாஜி பேசும்போது.

‘‘2017 ஆம் ஆண்டில் 17 படங்களிலும், 2018 ஆம் ஆண்டில் 13 படங்களில் நடிக்கவும் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடிக்க வந்த வாய்ப்புகளை மறுத்தேன். காரணம் எனக்கு அதில் முழு திருப்தி இல்லை. அந்த நேரத்தில் நான் ‘LKG’ படத்திற்கான கதையை எழுதி வந்தேன். சென்னையில் சில வருடங்களுக்கு முன்பு வந்த வெள்ளத்திற்குப் பிறகு நடந்த தேர்தலில் 57 சதவீத வாக்குப் பதிவுகள்தான் நடந்தது. இளம் தலைமுறையினருக்கு யாருக்கு, ஏன் ஓட்டுப் போட வேண்டும் என்று தெரியாமல் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்தேன். இந்த ‘LKG’ படம் பார்த்துவிட்டு கண்டிப்பாக பலரும் வாக்களிக்க வருவார்கள். இது ஸ்பூஃப் படம் கிடையாது. இந்த படம் பார்க்கும் ரசிகர்களை கண்டிப்பாக யோசிக்க வைக்கும். இது என்னுடைய தனிப்பட்ட விருப்பமான படம் அல்ல, ஆனால், சமுதாய நோக்குடன் எடுக்கப்பட்ட ஒரு படம். இந்தப் படத்தைக் கண்டிப்பாக எல்லோரும் ரசிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இந்தப்படம் தொடங்கியதும் என்னை பி.ஜே.பி., ஆர் எஸ் எஸ் சங்கி என்றார்கள். படத்தின் முன்னோட்டம் வெளியானதும் தி.மு.க என்றார்கள். இப்படம் எல்லாவற்றைப் பற்றியும் பேசும்’’ என்றார் ஆர்.ஜே.பாலாஜி

தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பேசும்போது, ‘‘எங்கள் நிறுவனத்தில் ஜெயம் ரவி, பிரபுதேவா ஆகியோர் நடிக்கும் படங்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றன. அவற்றை முந்திக் கொண்டு இந்தப் படத்தை முடித்துக் கொடுத்து விட்டார்கள். எனவே இந்தப்படத்தை முதலில் வெளியிடுகிறோம்.

ஆர்.ஜே.பாலாஜி மிகத் திறமையானவர். இந்தப்பட உருவாக்கத்தில் அவருடைய உழைப்பு பெரிது. நல்ல விஷயங்களைப் பேசி இருக்கும் இந்தப் படத்தை எங்கள் அப்பா பெயரில் தொடங்கியுள்ள நிறுவனத்தின் முதல் படமாக வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம். காரணம் அப்பாவும் அரசியல், சினிமா என்று இருந்தவர்! அப்போது எப்படி ஒரு ‘அமைதிப்படை’ படம் பேசப்பட்டதோ அதைப் போல இந்த LKG படமும் பேசப்படும்’’ என்றார்.

‘LKG’ படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசை அமைக்க, விது ஐயனா ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பை ஆண்டனி கவனித்துள்ளார். இந்த படத்தை தமிழகம் முழுக்க சக்தி வேலனின் ‘சக்தி ஃபிலிம் ஃபேக்டரி’ நிறுவனம் வெளியிடுகிறது.

#LKG #RJBalaji #PriyaAnand

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கீ - டிரைலர்


;