‘SK-15’-ல் கதாநாயகியாகும் பிரபல இயக்குனர் மகள்?

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் கல்யாணி பிரியதர்சன் கதாநாயகியாக நடிக்கிறார்!

செய்திகள் 19-Feb-2019 10:52 AM IST VRC கருத்துக்கள்

எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிக்கும் ‘மிஸ்டர் லோக்கல்’ மே 1-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து தொடர்ந்து ‘இன்று நேற்று நாளை’ படத்தை இயக்கிய ஆர். ரவிகுமார் இயக்கும் படம், ‘இரும்புத்திரை’ படத்தை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இயக்கும் படம் என்று இரண்டு படங்களில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். இதில் ரவிகுமார் இயக்க, சிவகார்த்திகேயனின் 14-ஆவது படமாக உருவாகி வரும் படத்தில் ரகுல் ப்ரீத் சிங் கதாநாயகியாக நடிக்கிறார். இந்நிலையில் பி.எஸ்.மித்ரன் இயக்கும் படத்திற்கான கதாநாயகியும் முடிவாகியுள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது. ‘மிஸ்டர் லோக்கல்’ படத்தில் நயன்தாரா, ‘SK-14’ படத்தில் ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகியிருக்கும் நிலையில், மித்ரன் இயக்கும் படத்தில் இயக்குனர் பிரியதர்சன் மற்றும் நடிகை லிசியின் மகள் கல்யாணி பிரியதர்சன் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகிறாராம்! இது குறித்த பேச்சு வார்த்தைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது என்றும் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது! தெலுங்கு சினிமாவில் அறிமுகமான கல்யாணி பிரியதர்சன் இப்போது துல்கர் சல்மானுடன் ‘வான்’ என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தவிர பிரியதர்சன் இயக்கி வரும் ‘மரைக்கார்’ என்ற மலையாள படத்திலும் நடித்து வருகிறார்.

#SK #SivaKarthikeyan #SK15 #PSMithran #KalyaniPriyadarshan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

Watchmen ட்ரைலர்


;