சூர்யாவின் ‘காப்பான்’ சுறுசுறுப்பும் விறுவிறுப்பும் கலந்த த்ரில்லர் படம்!

சூர்யாவின் ‘காப்பான்’ மற்றும் LKG, 90ML, தேவி-2, வாட்ச்மேன், கென்னடி கிளப் ஆகிய படங்கள் பற்றி படத்தொகுப்பாளர் ஆண்டனி!

செய்திகள் 20-Feb-2019 12:27 PM IST Top 10 கருத்துக்கள்

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன்லால், சாயிஷா, ஆர்யா, பொம்மன் இரானி, சமுத்திரக்கனி ஆகியோர் நடிக்கும் படம் ‘காப்பான்’. ‘லைகா புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்தில் ஆண்டனி படத்தொகுப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த படம் தவிர விரைவில் வெளியாக இருக்கும் ஆர்.ஜே.பாலாஜியின் ‘LKG’, ஓவியா நடிக்கும் ‘90ML’, பிரபுதேவா நடிக்கும் ‘தேவி-2’, ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘வாட்ச்மேன்’, சுசீந்திரன் இயக்கி வரும் ‘கென்னடி கிளப்’ ஆகிய படங்களின் படத்தொகுப்பாளரும் ஆண்டனியே!

இந்நிலையில் இந்த படங்கள் குறித்து ஆண்டனி ட்விட்டரில் பதிவிட்டுள்ளதில், ‘‘விரைவில் வெளியாக இருக்கும் மேற்குறிப்பிட்ட படங்களில் வேலை செய்தது மகிழ்ச்சி. ‘LKG’ அரசியல் கலந்த மிக நகைச்சுவையான படம், ‘தேவி-2’ குடும்பத்துக்கான இரண்டு மடங்கு ஜாலியான படம், ‘வாட்ச்மேன்’ ஒரு வித்தியாசமான முயற்சியில் உருவாகியுள்ள த்ரில்லர் படம், ‘கென்னடி கிளப்’ சுறுசுறுப்பாக வெற்றியை பெறப்போகும் படம், ‘90ML’ பெண்களை மையப்படுத்திய மிக நகைச்சுவையான படம், ‘காப்பான்’ சுறுசுறுப்பும் விறுவிறுப்பும் கலந்த த்ரில்லர் மற்றும் பல திருப்பங்கள் நிறைந்த படம்’’ என்று ஒவ்வொரு படத்தை பற்றியும் பாசிட்டிவான கருத்துக்களை தெரிவித்துள்ளார். இதனால இப்படங்கள் சம்பந்தப்பட்ட அனைவரும் மகிழ்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.


#Kaappaan #Suriya #LKG #90ml #Watchman #KennedyClub #Sasikumar #Devi2 #LycaProductions

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

NGK - ட்ரைலர்


;