உதயநிதி படம், முக்கிய தகவலை வெளியிட்ட இயக்குனர் சீனுராமசாமி!

‘கண்ணே கலைமானே’ படம் குறித்து இயக்குனர் சீனுராமசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பின் விவரம் வருமாறு…

செய்திகள் 20-Feb-2019 1:45 PM IST VRC கருத்துக்கள்

சீனுராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், தமன்னா நடிக்கும் படம் ‘கண்ணே கலைமானே’. இந்த படம் நாளை மறுநாள் (22-2-19) ரிலீசாகிறது! இந்நிலையில் இந்த படம் குறித்து இயக்குனர் சீனுராமசாமி தனது ட்விட்டர் பக்கத்த்தில், ‘‘என் எல்லா படங்களையும் சர்வகட்சி தலைவர்களுக்கு சிறப்புக் காட்சியாக திரையிடல் செய்வதுண்டு! இம்முறை திரு.உதயநிதி, செல்வி. தமன்னா நடித்து வரும் 22-ல் வெளியாகும் ‘கண்ணே கலைமானே’ திரைப்படத்திற்கு அவ்வாய்ப்பில்லை. கூட்டணிகள் தீர்மானிக்கின்றன பிரிவியூ காட்சிகளையும்…’ என்று குறிப்பிட்டுள்ளார்.

வருகிற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் கூட்டணி அமைப்பதற்கான வேலைகளில் படு பிசியாக இயங்கி வரும் நிலையில் இயக்குனர் சீனுராமசாமி இந்த ட்வீட் செய்திருப்பது கவனத்திற்குரியதாகும்!

#SeenuRamasamy #KanneKalaimaane #Udhayanidhi #Tamannah #YuvanShankarRaja

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிந்துபாத் ட்ரைலர்


;