‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தை கைபற்றிய பிரபல தயாரிப்பாளர்!

‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் விநியோக உரிமையை கைபற்றிய ‘விக்ரம் வேதா’  தயாரிப்பாளர்!

செய்திகள் 20-Feb-2019 2:27 PM IST VRC கருத்துக்கள்

‘ஆரண்யகாண்டம்’ படத்தை தொடர்ந்து தியாகராஜன் குமார ராஜா இயக்கியுள்ள படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில், சமந்தா, மிஷ்கின், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடித்துள்ள இந்த படத்தின் அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் முடிவடைந்து இப்போது இறுதிகட்ட வேலைகள் நடந்து வருகிறது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இந்த படம் விரைவில் வெளியாக இருப்பதால் படத்தின் வியாபார விஷயங்களும் சூடு பிடித்துள்ளது. இயக்குனர் தியாகராஜன் குமார ராஜாவின் ‘டைலர்டர்டன் & கினோ ஃபிஸ்ட்’ நிறுவனத்துடன் ஈஸ்ட் வெஸ்ட் ட்ரீம் ஒர்க் எண்டர்டெயின்மெண்ட்’, மற்றும் அல்கேமி விஷன் ஒர்க்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தின் விநியோக உரிமையை ‘YNOTX மார்க்கெட்டிங் டிஸ்ட்ரிபியூஷன் நிறுவனம் கைபற்றியுள்ளது! இந்நிறுவனம் விநியோகம் செய்யும் முதல் திரைப்படம் இதுவாகும். இந்த நிறுவனத்தின் அதிபராக இருப்பவரும், சூப்பர் ஹிட்டான ‘விக்ரம் வேதா’ உட்பட பல படங்களின் தயாரிப்பாளருமான சசிகாந்த் இது குறித்து கூறும்போது, ‘‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் மூலம் விநியோகத்துறையிலும் கால்பதிப்பது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த படம் தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான படமாக இருக்கும். அதே நேரம் இந்த படம் சினிமாவில் ஒரு புதிய பாதையையும் உருவாக்கும். அத்துடன் இந்த படம் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமையும் என்ற நம்பிக்கையும் எங்களுக்கு உள்ளது’’ என்று கூறி உள்ளார்.

#SuperDeluxe #VijaySethupathi #YNOTX #ThiyagarajanKumararaja #Samantha #MirnaliniRavi

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூப்பர் டீலக்ஸ் ட்ரைலர்


;