மீண்டும் ரிலீஸ் தள்ளி வைத்த அதர்வா படம்!

ஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா, மேகா ஆகாஷ் நடிக்கும் ‘பூமராங்’ மார்ச்- 8-ஆம் தேதி ரிலீசாகிறது

செய்திகள் 22-Feb-2019 3:08 PM IST VRC கருத்துக்கள்

‘இவன் தந்திரன்’ படத்தை தொடர்ந்து ஆர்.கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பூமராங்’. அதர்வா, மேகா ஆகாஷ் கதாநாயகன் கதாநாயகியாக நடித்திருக்கும் இந்த படத்தில் இவர்களுடன் உபேன் பட்டேல் சுஹாசினி மணிரத்னம், இந்துஜா, சதீஷ், ஆர்.ஜே.பாலாஜி உட்பட பலர் நடித்துள்ளனர். இயக்குனர் கண்ணனே தயாரித்துள்ள இந்த படம் ஏற்கெனவே சில ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டு, அந்த தேதிகளில் இப்படம் ரிலீசாகாமல் இருந்த நிலையில் கடைசியாக சமீபத்தில் இப்படம் மார்ச் 1-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது இப்படத்தின் ரிலீஸை மீண்டும் ஒரு வாரத்துக்கு தள்ளி வைத்து மார்ச் 8-ஆம் தேதி இப்படம் வெளியாகும் என்று அறிவித்துள்ளனர்.

மார்ச் 1-ஆம் தேதி அருண் விஜய்யின் ‘தடம்’ சேரனின் ‘திருமணம்’, ஓவியாவின் ‘90ML’, சாருஹாசன் முக்கிய கேரக்டரில் நடிக்கும் ‘தாதா-87’, மற்றும் ‘மான்சி’ முதலான படங்கள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

#Atharvaa #MeghaAkash #Indhuja #UpenPatel #Sathish #RJBalaji #Boomerang

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கொரில்லா - ட்ரைலர் 1


;