கார்த்தியை இயக்கும் ‘ரெமோ’ இயக்குனர்!

‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ தயாரிக்க,  கார்த்தியின் 19-வது படத்தை ‘ரெமோ’ படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்குகிறார்

செய்திகள் 25-Feb-2019 10:44 AM IST Top 10 கருத்துக்கள்

‘தேவ்’ படத்தை தொடர்ந்து ‘மாநகரம்’ படப் புகழ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி. இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் விரைவில் முடிவடைய இருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து கார்த்தியின் 19-வது படமாக உருவாக இருக்கும் ‘K-19’ என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள படத்தை ‘ரெமோ’ படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்குகிறார். மார்ச் இரண்டாவது வாரத்தில் இப்படத்தின் டப்பிடிப்பு துவங்க இருக்கிறது. இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி வெற்றிப் படமாக அமைந்த ‘கீதா கோவிந்தம்’ படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்தவர்! அத்துடன் ஒரு சில கன்னட படங்களிலும் நடித்துள்ளார் இவர். இவர் ‘K-19’ படம் மூலம் தமிழிலும் அறிமுகமாகிறார். இந்த படம் எமோஷன், ஆக்‌ஷன் கலந்த காமெடி கதையாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து ரசிகர்களும் ரசிக்கும்விதமாக உருவாக இருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்புக்காக சென்னையில் பிரம்மாண்ட செட் ஒன்றை அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னையை தவிர்த்து இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்திலும் நடக்க இருக்கிறது. அனைத்து ரசிகர்களிடமும் பெரும் ஆதரவு பெற்ற கார்த்தியின் ‘சிறுத்தை’, ‘கடைக்குட்டி சிங்கம்’ ஆகிய படங்கள் வரிசையில் இப்படமும் அனைவரையும் கவரும் விதமாக உருவாகிறது என்று இந்த படத்தை தயாரிக்கும் ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனத்தின் அதிபர்களான எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு தெரிவித்துள்ளனர்.

‘ஜோக்கர்’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘அருவி’ போன்ற வித்தியானமான வெற்றிப் படங்களை தயரித்த ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸி’ன் மற்றொரு தயாரிப்பாக உருவாகும் ‘K-19’ படத்திற்கு விவேக் மெர்வின் இசை அமைக்கிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்கிறார். கலை இயக்குனராக ஜெய் பணி புரிகிறார். பத்தொகுப்பை ரூபன் கவனிக்கிறார். சண்டை பயிற்சியை திலீப் சுப்பராயன் மேற்கொள்கிறார். புரொடக்‌ஷன் டிசைனிங்கை ராஜீவன் கவனிக்கிறார். தயாரிப்பு நிர்வாகத்தை அரவிந்த்ராஜ் பாஸ்கரன் கவனிக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தம்பி டீஸர்


;