கே.ஆர்.விஜயா இரட்டை வேடத்தில் நடிக்கும் படம்!

ஆர்.கே.செல்வமணி உதவியாளர் சாய் இளவரசன் இயக்கத்தில் கே.ஆர்.விஜயா இரண்டு  வேடங்களில் நடிக்கும் படம் ‘கோடீஸ்வரி’

செய்திகள் 25-Feb-2019 1:41 PM IST Top 10 கருத்துக்கள்

இயக்குனர்கள் ஆர்.கே.செல்வமணி, டி.பி.கஜேந்திரன், ஈ.ராமதாஸ் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றிய சாய் இளவரசன் இயக்கும் படம் ‘கோடீஸ்வரி’. குடும்ப கதையாக உருவாகும் இந்த படத்தில் கே.ஆர்.விஜயா இரட்டை வேடங்களில் நடிக்கிறார். நீண்ட வருடங்களுக்கு பிறகு கே.ஆர்.விஜயா இரட்டை வேடமேற்று நடிக்கும் இந்த படத்தில் இளம் கதாநாயகனாக A.மோகன் அறிமுகமாகிறார். இன்னொரு நாயகனாக காவல்த்துறை அதிகாரியாக ரிஸ்வான் அறிமுகமாகிறார். இவர்களுடன் கதாநாயகிகளாக அஷ்மா, சுப்ரஜா அறிமுகமாகிறார்கள். மற்றும் டி.பி.கஜேந்திரன், நெல்லை சிவா, முத்து, அஞ்சலி, ஸ்டாலின், கராத்தே ராஜா, சேலம் கே.முருகன், துரை ஆனந்த், கருணாநிதி, ராஜேந்திரன் ஆகியோரும் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு மதுரை, சிவங்கங்கை, கிருஷ்ணகிரி, சேலம், ஏற்காடு ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளது. தாமஸ் ரத்னம் இசை அமைக்கும் இந்த படத்தின் ஒளிப்பதிவை ஏ.எஸ்.ராஜ் கவனிக்க, படத்தொகுப்பை ராம்நாத் கவனித்து வருகிறார். ‘ஸ்ரீஆண்டாள் அம்பிகை கிரியேஷன்ஸ்’ என்ற நிறுவனம் தயாரிக்கும் இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது!

#KRVijaya #RKSelvamani #AMohan #NellaiSiva

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தேவராட்டம் ட்ரைலர்


;