இந்த வார ரிலீஸ் களத்தில் எத்தனை படங்கள்?

இந்த வாரம் தடம், திருமணம், 90ML, தாதா-87, அடடே, விளம்பரம், பிரிவதில்லை ஆகிய 7 நேரடி தமிழ் திரைப்படங்கள் வெளியாகின்றன!

செய்திகள் 1-Mar-2019 10:39 AM IST Top 10 கருத்துக்கள்

சென்ற வாரம் உதயநிதி ஸ்டாலினின் ‘கண்ணே கலைமானே’, ஆர்.ஜே.பாலாஜியின் ‘LKG’, செழியனின் ‘டுலெட்’, சமுத்திரக்கனியின் ‘பெட்டிக்கடை’ ஆகிய நான்கு நேரடி தமிழ் திரைப்படங்கள் ரசிகர்களின் பார்வைக்காக திரைக்கு வந்தன! அந்த வரிசையில் இந்த வாரம் எத்தனை நேரடித் தமிழ் திரைப்படங்கள் ரிலீஸ் களத்தில் உள்ளன என்பதை பார்ப்போம்!

1.தடம்

‘தடையற தாக்க’ படத்தை தொடர்ந்து இயக்குனர் மகிழ் திருமேனியும், அருண் விஜய்யும் மீண்டும் இணைந்துள்ள படம் ‘தடம்’. அருண் விஜய் நடிப்பில் ‘குற்றம்-23’ படத்தை தயாரித்த இந்தர் குமார் தயாரித்துள்ள இந்த படத்தில் அருண் விஜய்யுடன் தன்யா ஹோப், ஸ்ருதி வெங்கட், வித்யா பிரதீப், சோனியா அகர்வால், ‘ஃபெஃப்சி’ விஜயன் ஆகியோரும் நடித்துள்ளனர். ‘தடம்’ கிரைம் த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது. ‘குற்றம்-23’, ‘செக்கச் சிவந்த வானம்’ ஆகிய வெற்றிப் படங்களை தொடர்ந்து அருண் விஜய் நடிப்பில் வெளியாகும் படம் இது என்பதால் இப்படத்தின் மீது எதிரபார்ப்பு இருந்து வருகிறது. அந்த எதிர்பார்பை இந்த படம் பூர்த்தி செய்யும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திறகு அருண்ராஜ் இசை அமைக்க, கோபிநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார்..

2. திருமணம்

ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு சேரன் இயக்கியுள்ள படம் ‘திருமணம்’. நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி கதையின் நாயகனாக நடிக்க மலையாள நடிகை காவ்யா சுரேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார்,. இவர்களுடன் முக்கிய கேரக்டர்களில் சேரன், சுகன்யா, ஜெயப்பிரகாஷ், எம்.எஸ்.பாஸ்கர், மலையாள நடிகை சீமா.ஜி நாயர், தம்பி ராமையா ஆகியோரும் நடித்துள்ளனர். பந்தாவுக்காக தங்களது தகுதியை மீறி கடன் வாங்கி திருமணத்தை செய்து வைக்க, அந்த கடனை அடைக்க முடியாமல் சிக்கல்களில் மாட்டிக்கொள்ளும் நடுத்தர மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், இதுபோன்ற பிரச்சனைகள் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்ற கருத்தை சொல்லும் படமாக ‘திருமணம்’ உருவாகியுள்ளது. குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தொடர்ந்து இயக்கி வரும் சேரனின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படமும் குடும்பத்தினரை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு சித்தார்த் விபின் இசை அமைத்துள்ளார்.

3. 90ML

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி மூலம் புகழின் உச்சிக்கு சென்ற ஓவியா முக்கிய கேரக்டரில் நடித்துள்ள படம் இது. ‘குளிர்-100’ படத்தை இயக்கிய அனிதா உதீப் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஓவியாவுடன் ஆன்சன் பால், நிதின் சத்யா, விக்னேஷ் சிவன், அரவிந்த் ஆகாஷ், யோகி பாபு, ஆர்.ஜே.பாலாஜி உட்பட பலர் நடித்துள்ளனர். சிம்பு இசை அமைத்து ஒரு கேமியோ கேரக்டரிலும் நடித்துள்ள இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி இளம் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றிருப்பதோடு பல்வேறு விதமான விமர்சனங்களும் இந்த டிரைலர் மீது உருவாகியது என்பது குறிப்பிடத்தக்கது. சென்சாரில் ‘A’ சர்டிஃபிக்கெட் கிடைத்துள்ள இந்த படமும் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்போடு இன்று வெளியாகிறது.

4. தாதா-87

அறிமுக இயக்குனர் விஜய்ஸ்ரீ.ஜி இயக்கத்தில் சாருஹாசன், சரோஜா (நடிகை கீர்த்தி சுரேஷின் பாட்டி), ஆனந்த் பாண்டி, ஸ்ரீபல்லவி, ஜனகராஜ், கதிர், பாலா சிங், மாரிமுத்து, மணிமாரன் ஆகியோர் நடித்துள்ள படம் ‘தாதா-87’. இந்த படத்தில் சாருஹாசன் 87 வயதுடைய ஒரு ரௌடியாக நடிக்க இப்படம் காதல், ரௌடிசம், அரசியல் என்று பல்வெறு கதைக்களங்களில் பயணிக்கும் படமாக உருவாகியுள்ளது. கலைசெல்வன் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ராஜபாண்டி ஒளிப்பதிவு செய்துள்ளா. லியாண்டர் லீ மார்ட்டி, அல்ருஃபான், தீபன் சக்கரவர்த்தி ஆகியோர் இசை அமைத்துள்ளனர். நிஜந்தன் படத்தொகுப்பு செய்துள்ளார்.

5. அடடே

முழுக்க முழுக்க மொபைல் ஃபோன் கேமரா பயன்படுத்தி காட்சிகளை படம் பிடித்த படம் ‘அடடே’. கமல் சரோமுனி இயக்கி கதையின் மைய கதாபாத்திரத்தில் நடிக்கவும் செய்துள்ள இந்த படம் இரும்பை தங்கமாக மாற்றக் கூடிய சக்தி வாய்ந்த ஒரு மூலிகையை தேடி காட்டுக்குள் பயணிக்கும் சில இளைஞர்கள் சந்திக்கும் பிரச்சனைகள், அந்த பிரச்சனைகளை தொடர்ந்து அவர்களது லட்சியம் நிறைவேறுகிறதா என்பதை சொல்லும் படமாக உருவாகியுள்லது. புதிய முயற்சியில் எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் பங்கு பெற்றிருப்பவர்கள் பெரும்பாலானவர்களும் புதுமுகங்களே என்பது குரிப்பிடத்தக்கது.

மேற்குறிப்பிட்ட படங்கள் தவிர கே.ஏ.சூரியநித்தி இயக்கத்தில் புதுமுகங்கள் நடிக்கும் ‘விளம்பரம்’ மற்றும் சீதாபதி ராம் இயக்கத்தில் புதுமுகங்கள் நடிக்கும் ‘பிரிவதில்லை’ என்ற படமும் இந்த வாரம் ரிலீசாகிறது என்ற அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படங்களில் எந்தெந்த திரைப்படங்கள் ரசிகர்களின் வரவேற்பு பெற்று வெற்றிப் படங்களாக அமையும் என்பது வரும் நாட்களில் தெரிந்து விடும்!

#90ML #Thadam #ThaTha87 #Thirumanam #Oviya #ArunVijay

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு சட்டை ஒரு பல்பம்


;