கார்த்தி, விஜய்சேதுபதி, பிரியாமணி உள்ளிட்ட 201 பேருக்கு கலைமாமணி விருது!

தமிழக அரசின் கலைமாமணி விருதுக்கு 201 கலைஞர்கள் தேர்வு!

செய்திகள் 1-Mar-2019 3:49 PM IST VRC கருத்துக்கள்

தமிழக அரசு சார்பில் செயல்பட்டு வரும் இயல் இசை நாடக மன்றம் வருடந்தோறும் சிறந்த கலைஞர்களை தேர்வு செய்து அவர்களுக்கு கலைமாமணி விருதுகள் வழங்கி வருவது வழக்கம். ஆனால் இந்த விருதுகள் கடந்த 8 ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில் தமிழக அரசு கடந்த 8 ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுக்குரிவர்களை தேர்வு செய்து அறிவித்துள்ளது. 8 ஆண்டுகளுக்காக மொத்தம் 201 கலைஞர்கள் கலைமாமணி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் சினிமாவை சேர்ந்த நடிகர்கள் கார்த்தி, விஜய் சேதுபதி, ஆர்.ராஜசேகர், பி.ராஜீவ், பாண்டு, சரவணன், பொன்வண்ணன், பாண்டியராஜன், ஸ்ரீகாந்த், சந்தானம், சசிக்குமார், தம்பி ராமையா, இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா, நடிகைகள் பிரியாமணி, நளினி, சாரதா, இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனி, பின்னணி பாடகர் உன்னி மேனன், தயாரிப்பாளர் ஏம்.எம்.ரத்னம் உட்பட சினிமா உலகத்தைச் சேர்ந்த ஏராளமானோருக்கு கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதுகள் வழங்கும் விழா விரைவில் சென்னையில் நடக்க இருக்கிறது. கலைமாமணி விருதுகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்குவார்.

#KalaimamaniAward #Kalaimamani #Karthi #VijaySethupathi #SasiKumar #PriyaMani #vijayantony
#Yuvanshankarraj

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிந்துபாத் ட்ரைலர்


;