நதிநீர் இணைப்பின் அவசியத்தை வலியுறுத்து படம்!

கண்ணன் இயக்கத்தில் அதர்வா, மேகா ஆகாஷ் நடிக்கும் ‘பூமராங்’ இம்மாதம் 8-ஆம் தேதி வெளியாகிறது!

செய்திகள் 2-Mar-2019 11:32 AM IST Chandru கருத்துக்கள்

ஆர்.கண்ணன் இயக்கி, தயாரித்துள்ள படம் ‘பூமராங்’. அதர்வா, மேகா ஆகாஷ், இந்துஜா, ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் முக்கிய கேரட்கர்களில் நடித்துள்ள இந்த படம் இம்மாதம் 8-ஆம் தேதி வெளியாகிறது. இதனை முன்னிட்டு நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குனர் கண்ணன் படம் குறித்து பேசும்போது,

‘‘ஒரு படம் நினைத்தது மாதிரி வரணும் என்றால் அதற்கு நாயகனின் ஒத்துழைப்பு மிக அவசியம். அந்த வகையில் அதர்வா இந்த படத்திற்கு மிகப் பெரிய தூணாக இருந்தார். அடுத்து இன்னொரு படத்திலும் நாங்கள் இணைகிறோம். இந்த படம் காலம் காலமாக இருந்து நதி நீர் பிரச்சனையை, நதி நீர் இணைப்பு பற்றி பேச வரும் படமாகும். அதை எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும் விதமாக பொழுதுபோக்கு அம்சங்களுடன் சொல்லியிருக்கிறேன்’’ என்றார்.ஆர்.ஜே.பாலாஜி பேசும்போது, ‘‘இருப்பதை வைத்து மிகச் சிறப்பாக படத்தை எடுப்பவர் கண்ணன். மோதலில் தான் காதல் உருவாகும் என்பது போல எனக்கும் கண்ணனுக்கும் உரசலில் தான் நட்பு ஆரம்பமானது. அந்த உரசல் அவர் இயக்கத்தில் வெளியான ‘சேட்டை’ பட வெளியீட்டின்போது நடைபெற்றது! எனக்கு கதை எழுதுவதில் நம்பிக்கை வர முக்கிய காரணம் கண்ணன் இயக்கி நானும் ஒரு கேரக்டரில் நடித்த ‘இவன் தந்திரன்’ படம் தான். காலம் காலமாக தீரக்கப்படாத நதிநீர் இணைப்பு பற்றி பேச வருகிறது இந்த படம்’’ என்றார்.‘பூமராங்’கில் காதாநாயகனாக நடித்திருக்கும் தர்வா பேசும்போது, ‘‘பூமராங்’ என்றால் கர்மா என்று அர்த்தம். அதாவது நாம் என்ன செய்தோமோ அது நமக்கு திரும்ப வரும் என்பது! நதி நீர் இணைப்பு பற்றி பேசும் படம் இது. நம் சமூகத்துக்காக இளைஞர்கள் எப்படி செயல்பட வேண்டும் என்ற கருத்தையும் வலியுறுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் அறிவுரைகள் இருக்காது. அதே நேரம் நாட்டுக்கு தேவையான, இளம் தலைமுறையினருக்கு தேவையான நல்ல கருத்துக்களை முன் வைத்து இந்த படத்தை இயக்கியிருக்கிறார் கண்ணன். எல்லோரும் இந்த படத்தை தியேட்டருக்கு வந்து பார்க்க வேண்டும்’’ என்றார்.‘பூமராங்’ படத்திற்கு ‘அர்ஜுன் ரெட்டி’ படத்திற்கு இசை அமைத்த ரதன் இசை அமைத்துள்ளார். சென்சாரில் ‘U’ சர்டிஃபிக்கெட் கிடைத்துள்ள இந்த படத்தை ஆர்.கண்ணன் தனது ‘மசாலா பிக்ஸ்’ நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார்.


#Atharvaa #MeghaAkash #IndhujaRavichandran #Sathish #RJBalaji #Boomerang

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கொரில்லா - ட்ரைலர் 1


;