‘காக்கி’க்காக சிக்ஸ்பேக் அவதராம் எடுக்கும் விஜய் ஆண்டனி!

‘வாய்மை’ படத்தை இயக்கிய செந்தில் குமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ஜெய், சத்யராஜ் இணைந்து நடிக்கும் படம் ‘காக்கி’

செய்திகள் 4-Mar-2019 12:53 PM IST Top 10 கருத்துக்கள்

‘வாய்மை’ படத்தை இயக்கிய செந்தில் குமார் அடுத்து இயக்கும் படத்திற்கு ‘காக்கி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே சில படங்களில் போலீஸ் அதிகாரியாக் நடித்த விஜய் ஆண்டனி மீண்டும் இப்படத்தில் காக்கி அணிந்து நடிக்கிறார். இந்த படம் அதிரடி, ஆக்‌ஷன் எண்டர்டெயினர் படமாக உருவாகிறது என்றும் இந்த படத்திற்காக விஜய் ஆண்டனி முதன் முதலாக சிக்ஸ் பேக் அவதாரம் எடுத்து நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் விஜய் ஆண்டனியுடன் இன்னொரு ஹீரோவாக ஜெய் நடிக்க, இவர்களுடன் சத்யராஜ், ஈஸ்வ்ரி ராவ், யோகி பாபு, ரோபோ சங்கர் ஆகியோரும் நடிக்கிறார்கள். இப்படத்திற்கான கதாநாயகிகள் தேர்வு நடந்து வருகிறது. இந்த படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, ‘வாய்மை’ படத்திற்கு இசை அமைத்த அகத் இசை அமைக்கிறார். பாடல்களை வைரமுத்து எழுதுகிறர். சண்டை காட்சிகளை கனல் கண்ணன் அமைக்கிறார்.

‘OPEN THEATRE’ என்ற நிறுவனம் சார்பில் தமிழினி, லிங்கவேலன், சுகதேவ், முத்துலட்சுமி ஆகியோர் இணைந்து தயாரிக்கும் ‘காக்கி’ படத்தின் பூஜை இன்று காலை ஏவி.எம். ஸ்டுடியோ வளாகத்தில் உள்ள பிள்ளையார் கோயிலில் சிறப்பாக நடந்தது. இந்நிகழ்ச்சியில் ‘காக்கி’ படக்குழுவினருடன் ஏவி.எம்.சரவணன் உட்பட பல திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.

#VijayAntony #Khakhee #SenthilKumar #Sathyaraj #EswariRao #RoboShankar #YogiBabu

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கொலைகாரன் -டீஸர்


;