சிவராத்திரியை முன்னிட்டு சர்ப்ரைஸ் கொடுத்த அஜித்!

வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம் ‘நேர்கொண்ட பார்வை’

செய்திகள் 5-Mar-2019 10:45 AM IST VRC கருத்துக்கள்

‘தீரன் அதிகாரம் ஒன்று’ பட இயக்குனர் வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் ‘அஜித்-59’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படம் குறுகிய கால தயாரிப்பாக உருவாக இருக்கிறது என்றும் இந்த படத்தை மே மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளது என்பதையும் படக்குழுவினர் ஏற்கெனவே அறிவித்திருந்தனர். இந்நிலையில் படு வேகமாக படப்பிடிப்பு நடந்து வரும் இப்படத்திற்கு தலைப்பு என்னவாக இருக்கும், படத்தில் அஜித்தின் தோற்றம் எப்படி இருக்கும் என்று எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக படக்குழுவினர் நேற்று மாலை ‘நேர்கொண்ட பார்வை’ என்ற டைட்டிலுடன் கூடிய இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு அஜித் ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்தனர்.

இந்த படம் ஹிந்தி ‘பிங்க்’ படத்தின் ரீ-மேக் என்பதும் இந்த படத்தில் அஜித் வழக்கறிஞராக நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் அஜித்துடன் வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாசலம், அர்ஜுன் சிதம்பரம், அஸ்வின் ராவ், சுஜித் ஷங்கர், ரங்கராஜ் பாண்டே உட்பட பலர் நடிக்கின்றனர். பாலிவுட் பிரபலம் போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். சமீபகாலமாக அஜித் நடிக்கும் படங்களின் அறிவிப்புகள், டீஸர், டிரைலர் வெளியீடு முதலானவை சாய் பாபாவுக்கு உகந்த நாளான வியாழக் கிழமைகளில் தான் நடைபெறும்! ஆனால் இந்த முறை அஜித் நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சிவராத்திரியை முன்னிட்டு வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

#NerkondaPaarvai #Ajith #HVinoth #Pink #ShraddhaSrinath #AshwinRao

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நேர்கொண்ட பார்வை டிரைலர்


;