பூஜையுன் துவங்கியது விஜய்சேதுபதி படம்!

விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய்சேதுபதி, ராஷிகண்ணா, நிவேதா பெத்துராஜ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது!

செய்திகள் 5-Mar-2019 6:45 PM IST Top 10 கருத்துக்கள்

சிம்பு நடிப்பில் ‘வாலு’ மற்றும் விக்ரம் நடிப்பில் ‘ஸ்கெட்ச்’ ஆகிய படங்களை இயக்கிய விஜய்சந்தர் அடுத்து விஜய் சேதுபதி நடிப்பில் ஒரு படத்தை இயக்க இருக்கிறார் என்றும் இந்த படத்தில் விஜய்சேதுபதியுடன் ராஷிகண்ணா, நிவேதா பெத்துராஜ் கதாநாயகிகளாக நடிக்கின்றனர் என்றும் தகவலை ஏற்கென்வே வெளியிட்டிருந்தோம். பல வெற்றிப் படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பு நிறுவனமான ‘விஜயா புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது. இந்த படத்தில் சூரி, நாசர், அஷுதோஷ் ராணா, ரவிகிஷன், ‘மோட்டை’ ராஜேந்திரன், மாரிமுத்து, ஜான் விஜய் ஆகியோரும் நடிக்கிறார்கல்.

பிரம்மாண்ட படைப்பாக உருவாகும் இந்த படத்திற்கு விவேக் – மெர்வின் ஆகியோர் இசை அமைக்கிறார்கள். இந்த படத்தின் ஒளிப்பதிவை ஆர்.வேல்ராஜ் கவனிக்க, கலை இயக்கத்தை எம்.பிரபாகரன் கவனிக்கிறார். படத்தொகுப்பினை கே.எல்.பிரவீன் செய்கிறார். சண்டை காட்சிகளை அனல் அரசு அமைக்கிறார்.

#VijaySethupathi #Soori #RaashiKhanna #NivethaPethuraj # VijayChandar

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வெண்ணிலா கபட்டி குழு 2 ட்ரைலர்


;