மீண்டும் இணையும் சிம்பு, ஹன்சிகா!

‘வாலு’ படத்தை தொடர்ந்து ‘மஹா’ படத்தின் மூலம் மீண்டும்  இணைகிறாரகள் சிம்பு, ஹன்சிகா!

செய்திகள் 6-Mar-2019 1:12 PM IST Top 10 கருத்துக்கள்

சிம்புவுடன் ‘வாலு’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ஹன்சிகா. இந்த படத்தை தொடர்ந்து இவர்கள் இருவரும் இணைந்து நடித்ததில்லை. இந்நிலையில் U.R. ஜமீல் இயக்கத்தில் ஹன்சிகா நடித்து வரும் ‘மஹா’ படத்தில் சிம்பு ஒரு சிறப்பு வேடத்தில் நடிக்கிறார் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் வெளியானது. ஆனால் ‘மஹா’ படத்தில் சிம்பு நடிப்பது குறித்த எந்த அதிகார்பூர்வ அறிவிப்பும் இப்படக்குழுவினர் சைடிலிருந்து வெளியாகவில்லை. இந்நிலையில் மஹா படத்தில் சிம்பு நடிக்க இருக்கும் தகவலை உறுதிப்படுத்தும் விதமாக சற்றுமுன் நடிகை ஹன்சிகா ஒரு ட்வீட் செய்துள்ளார். அதில், ‘முன் கூட்டியே தகவல் கசிந்துவிட்டது! நானும் சிம்புவும் ‘மஹா’ படத்தில் இணைகிறோம்’ என்று பதிவிட்டு ‘மஹா’வில் சிம்பு நடிப்பதை உறுதி செய்துள்ளார். இதனால் ‘வாலு’ படத்திற்கு பிறகு ஹன்சிகாவும், சிம்புவும் மீண்டும் இணைவது உறுதியாகியுள்ளது. சமீபத்தில் வெளியான ஓவியாவின் ’90 ML’ படத்தில் சிம்பு ஒரு கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். அதைப் போல ‘மஹா’விலும் சிம்பு ஒரு கெஸ்ட் ரோலில்தான் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.

‘ETCETERA ENTERTAINMENT’ நிறுவனம் சார்பில் வி.மதியழகன் தயாரிக்கும் ‘மஹா’ படத்திற்கு ஜிப்ரான் இசை அமைக்கிரர். சண்டை காட்சிகளை திலீப் சுப்பராயன் அமைக்கிறார்.

#STR #Hansika #Maha #Vaalu #Ghibran #Bogan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

100 ட்ரைலர்


;