விஷாலின் ‘அயோக்யா’ அப்டேட்!

அறிமுக இயக்குனர் வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால், ராஷிகண்ணா நடிக்கும் ‘அயோக்யா’ ஏப்ரல் 19-ஆம் தேதி வெளியாகிறது!

செய்திகள் 7-Mar-2019 12:35 PM IST VRC கருத்துக்கள்

அறிமுக இயக்குனர் வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால் கதையின் நாயகனாக நடிக்க, ராஷிகண்ணா கதாநாயகியாக நடிக்கும் படம் ‘அயோக்யா’. ‘லைட்ஹவுஸ் மூவி மேக்கர்ஸ்’ நிறுவனம் சார்பில் பி.மது தயாரித்திருக்கும் இந்த படத்தின் அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் முடிவடைந்து இப்போது இறுதிகட்ட வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியையும் படக்குழுவினர் குறித்து விட்டார்கள். ‘அயோக்யா’வை ஏப்ரல் 19-ஆம் தேதி ரிலீஸ் செய்ய இருப்பதாக படக்குழுவினர் திகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள். இப்படத்தில் விஷால். ராஷிகண்ணாவுடன் கே.எஸ்.ரவிக்குமார், பார்த்திபன், சச்சு, வம்சி உட்பட பலர் நடிக்கின்றனர். சாம்.சி.எஸ்.இசை அமைக்கும் இந்த படத்தின் ஒளிப்பதிவை கார்த்திக் கவனிக்க, படத்தொகுப்பை ரூபன் செய்து வருகிறார். ‘சண்டக்கோழி-2’ படத்திற்கு பிறகு விஷால் நடிப்பில் வெளியாகும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
#Vishal #RaashiKhanna #Ayogya #‘IrumbuThirai #Sandakozhi2 #ARMurugadoss

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

டான டீஸர்


;