13 ஆண்டுகளுக்கு பிறகு தனுஷுடன் இணையும் நடிகை!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ், சினேகா இணைந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு குற்றாலத்தில் துவங்கியது!

செய்திகள் 7-Mar-2019 12:42 PM IST VRC கருத்துக்கள்

சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டருக்கும் ‘விஸ்வாசம்’ படத்தை தொடர்ந்து ‘சத்யஜோதி ஃபிலிம்ஸ்’ தனுஷ் நடிப்பில் இரண்டு படங்களை தயாரிக்கிறது என்றும் இதில் ஒரு படத்தை துரை செந்தில்குமார் இயக்குகிறார் என்றும் இன்னொரு படத்தை ‘ராட்சசன்’ படப் புக்ழ ராம்குமார் இயக்குகிறார் என்றும் தகவலை வெளியிட்டிருந்தோம். இதில் துரை செந்தில் குமார் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு நேற்று குற்றாலத்தில் பூஜையுடன் துவங்கியது. கொடி படத்திற்கு பிறகு தனுஷும், துரை செந்தில்குமாரும் இணைந்துள்ள இந்த படத்தில் சினேகாவும் நடிக்கிறார். ‘புதுப்பேட்டை’ படத்தில் தனுஷுடன் இணைந்து நடித்த சினேகா அப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 13 ஆண்டுகளான நிலையில் மீண்டும் இப்படத்தின் மூலம் தனுஷுடன் இணைந்து நடிக்கிறார். நேற்று குற்றாலத்தில் துவங்கிய படப்பிடிப்பில் சினேகாவும் கலந்துகொண்டு நடித்தார். அங்கு இப்படத்தின் படப்பிடிப்பு வெலைகள் தொடர்ந்து 30 நாட்கள் நடைபெற இருக்கிறது. இன்னும் பெயரிடப்படாத இந்த படத்திற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார். விவேக் – மெர்வின் இசை அமைக்கிறார்கள். இந்த படம் தவிர தனுஷ் வெற்றிமாறன் இயக்கத்தில் ‘அசுரன்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார்!

#Dhanush #Sneha #RSDuraiSenthilKumar #SathyaJyotiFilms #Pudhupettai #Asuran

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பக்கிரி - ட்ரைலர்


;