தனுஷின் ‘ENPT’ முக்கிய அதிகாரபூர்வ தகவல்!

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ ஏப்ரல் மாதம் வெளியாகிறது!

செய்திகள் 7-Mar-2019 1:03 PM IST VRC கருத்துக்கள்

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ், சசிக்குமர் சுனைனா, ராணா உப்ட பலர் நடிக்கும் படம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’. கிட்டத்தட்ட இரண்டு வருடக் காலமாக தயாப்பில் இருந்து வரும் இந்த படத்தின் வேலைகள் இப்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் வெளியீடு குறித்த தகவலை இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ‘எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்’ மதன் வெளியிட்டுள்ளார். இது குறித்து மதன் ட்வீட் செய்திருப்பதில் ‘‘எனை நோக்கி பாயும் தோட்டா’வின் டிரைலர் ரெடியாகி விட்டது. படத்தை ரிலீஸ் செய்வதற்கான வேலைகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த பட்ம் ஏப்ரல் மாதம் வெளியாகும்’ என்று அதில் குறிப்பிட்டுள்ளர்.

தர்புகா சிவா இசை அமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் ஏற்கெனவே வெளியாகி ரசிகரகளிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் இப்படத்தின் சென்சார் காட்சியும் சமீபத்தில் நடைபெற்று ‘U/A’ சர்டிஃபிக்கெட் கிடைத்துள்ளது.

#ENPT #EnaiNokiPaayumThota #GauthamVasudevMenon #Dhanush #MeghaAkash #Sunaina
# RanaDaggubati

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பக்கிரி - ட்ரைலர்


;