சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் படத்தின் டைட்டில் அறிவிப்பு!

சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் படம் ‘டெடி’

செய்திகள் 9-Mar-2019 8:56 PM IST VRC கருத்துக்கள்

‘டிக் டிக் டிக்’ படத்தை தொடர்ந்து சக்தி சௌந்தர் ராஜன், ஆர்யா நடிப்பில் ஒரு படத்தை இயக்குகிறார் என்றும் இந்த படத்தின் கதை விவாதம் நடந்து வருகிறது என்ற தகவல் சில நாட்களுக்கு முன் வெளியாகியிருந்தது. இப்போது அந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘டெடி’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் சற்று முன் வெளியானது. இந்த படத்தை ஆர்யா நடிப்பில் ‘கஜினிகாந்த்’ படத்தை தயாரித்த ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜனின் ஆஸ்தான இசை அமைப்பாளரான டி.இமான் இசை அமைக்கிறார். இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகைகள், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாக இருக்கிறது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கூர்கா ட்ரைலர்


;