ஒரே நாளில் வெளியாகும் விஜய்யின் 2 படங்கள்!

விஜய் இயக்கத்தில் பிரபு தேவா நடிக்கும் ‘தேவி-2’, ஜி.வி.பிரகாஷ் நடிக்கும்  ‘வாட்ச்டேன்’ ஆகிய படங்கள் ஏப்ரல் 12-ஆம் தேதி வெளியாகிறது!

செய்திகள் 9-Mar-2019 9:13 PM IST VRC கருத்துக்கள்

விஜய் (ஏ.எல்.விஜய்) இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா நடிக்கும் ‘தேவி-2’ படத்தை ஐசரி கணேஷும், ‘டிரைடண்ட் ஆர்ட்ஸ்’ ரவீந்திரனும் இணைந்து தயாரித்துள்ளனர். அனைத்து வேலைகளும் முடிவடைந்த இப்படம் ஏப்ரல் 5-ஆம் தேதி வெளியாக இருக்கிறது என்று இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஐசரி கணேஷ் சமீபத்தில் நடந்த ‘LKG’ படத்தின் வெற்றிவிழாவில் பேசும்போது தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து ‘தேவி-2’ ஏப்ரல் 5-ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் இப்படத்தின் ரிலீஸை இப்போது ஒரு வாரம் தள்ளி, அதாவது ஏப்ரல் 12-ஆம் தேதி வெளியாகும் என்ற புதிய அறிவிப்பை படக்குழுவினர் சற்று முன் வெளியிட்டுள்ளனர். இதே தினம் விஜய் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார், சாயிஷா முதலானோர் நடிக்கும் ‘வாட்ச்மேன்’ படமும் வெளியாக இருக்கிறது. இது குறித்த அறிவிப்பை இப்படக் குழுவினர் சில நாட்களுக்கு முன் வெளியிட்டிருந்தனர். இந்த தககவலை நமது இணையதளத்தில் பதிவு செய்திருந்தோம். இதனால் விஜய் இயக்கிய இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளியாகும் சூழ்நிலை உருவாகியுள்ளது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஆக்‌ஷன் ட்ரைலர்


;