நட்டி நட்ராஜ், லால் இணையும் ‘காட்ஃபாதர்’

ஜெகன் ராஜ்சேகர் இயக்கத்தில் நட்டி நட்ராஜ், லால் இணைந்து நடிக்கும் படம் ‘காட்ஃபாதர்’

செய்திகள் 11-Mar-2019 11:45 AM IST VRC கருத்துக்கள்

‘சதுரங்க வேட்டை’, ‘எங்கிட்ட மோதாதே’, ‘போங்கு’ உட்பட பல படங்களில் நடித்துள்ள நட்டி நட்ராஜ் நடிக்கும் ஒரு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது. ‘காட்ஃபாதர்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட லுக்கை விஜய்சேதுபதி வெளியிட்டார். ஜெகன் ராஜ்சேகர் இயக்கும் இந்த படத்தில் நட்டி நட்ராஜுடன் மலையாள நடிகர் லால் ஒரு கேரக்டரில் நடிக்கிறார். இந்த ஃபர்ஸ்ட் லுக்கில் நட்டி நட்ராஜ், லால் ஆகியோரது பாதி முகங்கள் இடம்பெற்றிருப்பது மாதிரி வித்தியாசமாக வடைவமைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நட்டி நட்ராஜ் அதியமான் என்ற கேரக்டரிலும் லால் மருது சிங்கம் என்ற கேரக்டரிலும் நடிக்கிறார்கள்.

‘பர்ஸ்ட் கிளாப் எண்டர்டெயின்மெண்ட்’ மற்றும் ‘ஜி.எஸ்.ஆர்ட்ஸ்’ நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு நவீன் ரவிந்திரன் இசை அமைக்க, என்.சண்முகசுந்தரம் ஒளிப்பதிவு செய்கிறார். புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பை கவனிக்க அருண் சங்கர் கலை இயக்கத்தை மேற்கொள்கிறார்.

#Natty #GodFather #Lal #JeganRajsekhar #VijaySethupathi #NattyNatrajan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சங்கத்தமிழன் ட்ரைலர்


;