நீயா-2’வில் நிஜ ராஜநாகம்!

ஜெய், ராய்லட்சுமி, கேத்ரின் தெரெசா, வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் ‘நீயா-2’ விரைவில் வெளியாக இருக்கிறது.

செய்திகள் 11-Mar-2019 1:19 PM IST VRC கருத்துக்கள்

எத்தன்’ படத்தை இயக்கிய எல்.சுரேஷ் இயக்கத்தில் ஜெய், ராய் லட்சுமி, வரலட்சுமி சரத்குமார், கேத்ரின் தெரெசா, பாலசரவணன், நித்தீஷ் வீரா, லோகேஷ் ஆகியோர் நடிக்கும் படம் ‘நீயா-2’. ‘ஜம்போ சினிமாஸ்’ நிறுவனம் சார்பில் ஏ.ஸ்ரீதர் தயாரித்துள்ள இந்த படம் விரைவில் வெளியாக் இருக்கிறது. இதனை முன்னிட்டு இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இயக்குனர் வெற்றிமாறனும் கலந்துகொண்டார்.

‘நீயா-2’ படத்தில் நடித்தது குறித்து ராய் லட்சுமி பேசும்போது, ‘‘இரண்டு வருடங்களுக்கு பிறகு தமிழில் நடிக்கும் படம் இது. பாம்பை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம்! பேய் படங்களில் நடித்துள்ள எனக்கு பாம்பு சம்பந்தப்பட்ட இந்த கதையில் நடித்தது வித்தியாசமான அனுபவமாக இருந்தது’’ என்றார்.

படத்தின் இயக்குனர் சுரேஷ் பேசும்போது, ‘‘பாலுமகேந்திராவிடம் நானும் வெற்றிமாறனும் உதவியாளராக இருந்தோம். எனது முதல் படம் தெலுங்கு. அதன் தமிழ் பதிப்புதான் ‘எத்தன்’. இந்த படத்தின் தயாரிப்பாளர் பாம்பை மையமாக வைத்து ஒரு படத்தை தயாரிக்கலாம் என்றார். அது பற்றி யோசிக்கும்போது தொலைக்காட்சியில் ‘நாகினி’ தொடர் ஒளிபரப்பாகி கொண்டிருந்தது. அது நன்றாக போய் கொண்டிருந்தது. அதன் பிறகு தான் இந்த கதை தோறியது. அப்போது வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘நீயா’ படத்தில் நிஜ பாம்பை காட்டியிருப்பார்கள். அதைப்போல இப்படத்தில் ராஜநாகத்தை வைத்து படமாக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். அதற்காக பாம்பை பற்றி தெரிந்துகொள்ள பாங்காங் சென்றேன். அங்கு ராஜ நாகத்தை வீட்டில் வைத்து வளர்ப்பதை பார்த்து சில விஷயங்களை தெரிந்துகொண்டு ஒரு நிஜ பாம்பை வைத்து சில காட்சிகளை படமாக்கியுள்ளேன். அதே நேரம் கிராஃபிக்ஸ் செய்தும் டமாக்கியுள்ளோம். ‘நீயா’ பிரபலமான பெயர் என்பதால் இந்த படத்திற்கு ‘நீயா-2’ என்று டைட்டில் வைத்தோம். ஆனால் அந்த டத்திற்கும் இந்த ‘நீயா-2’ படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை! இந்த படம் ரொமாண்டிக் த்ரில்லராக உருவாகியுள்ளது. இந்த படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாரக்கக் கூடிய படமாக உருவாகியுள்ளது’’ என்றார்.

இந்த படத்திற்கு ஷபீர் இசை அமைத்துள்ளார். ராஜவேல், மோகன் ஒளிப்பதிவு செய்துள்ளன . கோபி கிருஷ்ண்டா படத்தொகுப்பு செய்துள்ளார். இப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் வெளியாக இருக்கிறது.

#Jai #VaralaxmiSarathkumar #RaaiLaxmi #CatherineTresa #Shabir #Neeya2

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அருவம் ட்ரைலர்


;